21 ம் நூற்றாண்டின் மிக மிக வெப்பமான ஆண்டு எது தெரியுமா? இந்த ஆண்டுதான், அதான்ப்பா. . கி. பி. 2010 தான். ஏன் தெரியுமா? இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. அதன் விளைவாக நடந்த நிகழ்வுகள். . எண்ணிலடங்காது. மே 31 ம் நாள் வரை, வெப்ப தாக்குதலால் இறந்தவர் எண்ணிக்கை, அரசின் அறிவிப்பு படி , 250 பேர். மேலும் 1901 லிருந்து, 2010 உள்ள வருடங்களில், 2010 தான் அதிக பட்ச வெப்பநிலை உள்ள ஆண்டாக கருதப் படுகிறது. மார்ச்ஏப்ரல் மாத சராசரி வெப்பம் எப்போதையும் விட அதிகம். மார்ச் மாத வெயிலின் வெப்பம், 26 . 3 டிகிரி . முன்பு இருந்ததைவிட 2 டிகிரி அதிகம். அதேபோல ஏப்ரலில் உலகம் சந்தித்த வெப்பம், 29 . 1 டிகிரி. இதுவும் பழைய பதிவுகளை விட 2 டிகிரி அதிகமே.

மே 17ல் வந்து மேற்குப் பகுதி மக்களை தாக்கிய லைலா புயல், கிழக்கு கடற்கரை பகுதிகளில். லேசான தூறலைத் தந்தது. கடந்த ஆண்டு எல் நினோ புயலுக்கு பின், இந்தியா உட்பட, உலகின் அனைத்து நாடுகளிலும் வெப்பம் உயர்ந்தது. ஒரு காலத்தில், இந்திய நாட்டின் வரைபடத்தில் , தார் பாலைவனம் என்ற ஒர்னுதான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தது. இப்போது, இன்னும் அதிக பகுதிகள், பாலைவனமாகும் வைப்பு அதிகமாக ள்ளது.

கட்டுபாடு இல்லாத நிலையில், மணல்துகள்கள் பறந்து, பறந்து, அருகிலிருக்கும் பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால், ஹரியான, பஞ்சாப், உத்திர பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்குஒவ்வொரு ஆண்டும் 1 /2 கி. மீ என்ற அளவில் பரவுகிறது. இதனால், இந்தியாவின் முக அமைப்பு மாறப் போகிறது. இவை இன்னும் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள்,மேற்கு இமயமலைப் பகுதிகள் போன்ற இடங்களுக்கும் இதே அளவில் விரிவடைகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு முதன் முறையாக இந்திய நிலங்கள் சிதைந்து கொண்டு இருப்பதை கணக்கில் கொண்டு, அந்த தகவல்களையும் இணைத்து இந்தியாவின் புதிய முகத்தோற்றத்தை /வரைபடத்தை உருவாக்கி கொண்டுள்ளனர்.

இவை இந்தியாவின் மிக நவீன தொழில் நுட்ப சாதனங்களைக் கொண்டு, இந்திய செயற்கைக்கோள் மூலம் கணக்கெடுப்பு செய்து, தயாரிக்கப் பட்டுளள்ளது. இது கடந்த 2003_2005ஆண்டுகளில் ஏற்பட்ட நிலை சிதைவு தகவல்களாகும். இந்த வரைபடம், இந்தியாவின் நிலம் சிதைவடைவதை காட்டும் எச்சரிக்கை மணியாகும். இதில் 32 . 07 % ஆக இருந்த நிலப்பரப்பு, , இப்போது, சிதைந்து, 24.78 % பாலைவனமாக மாறியுள்ள அவல நிலையை துல்லியமாக தெரிவிக்கிறது. தேசிய மண் கணக்கெடுப்பு மற்றும் நில பயன்பாட்டு , ஆணையம் மிகத் தெளிவாக", முன்பு தார் பாலைவனத்தின் பரப்பு, 1996 ம் ஆண்டு, 1,96, 150 ச. கி. மீ ஆக இருந்தது. இப்போது இது 2,08,110 ச. கி. மீ ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 10 வருடத்தில், தார் பாலைவனம்,

11,960 ச. கி. மீ அதிகரித்துள்ளது அதாவது, கடந்த 10 வருடத்தில்,, தார் பாலைவனத்தின் பரப்பு, 11,960 ச. கி. மீ அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் வாழ்நிலை, விவசாயம் மற்றும் காடுவளர்ப்பு போன்றவற்றில், 60% வேலைத்திறனை அபாயத்துக்கு உள்ளாக்கும் நிலைமை உருவாகுமாம். இந்தியாவின் நிலப்பரப்பை, உலக அளவில் ஒப்பிட்டு, கணக்கில் கொண்டால், இது 2. 4 % தான். ஆனால் உலக மக்கள் தொகையில் 16. 7 % மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இதனால் இந்தியாவின் இயற்கை வளங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி விடும்.

மனித செயல்பாடுகளான, சுரங்கம், காடுகளை அழித்தல், நீடித்த விவசாய முறைகளை கையாளாமை. போன்றவையும் கூட, நிலம் தரமற்றுப் போவதற்கு காரணிகளாகும், இதனால், நிலம் வளம் குறைந்து, உப்புத்தன்மை அதிகரித்து, காரத்தன்மை கூடி, நீர் தேங்கும் தன்மை அதிகமாகி, பாதிப்புக்கு உள்ளாகிவிடுகிறது. தார் பாலைவனம் மொட்டையாகி விட்டது. ஆரவல்லி மலைத்தொடர்கள் அதிக சுரண்டலால் மறைந்து கொண்டிருக்கின்றன. மேலும், சிந்துகங்கை சமவெளி, ஹரியான், உத்திர பிரதேசம் மற்றும், குஜராத்தின் கடற்கரைப் பகுதிகள் அவைகளின் உற்பத்தி திறன் இழந்து உப்பு தன்மை அதிகரித்துள்ளது. மேலும் இங்கே, நீர் மற்றும் அறிமானம் ஆகிவையும் தன் பங்குக்கு போதிய வேலையை செய்துள்ளன. இதில் 9,400 ,000 ஹெக்டேர் நிலம் முடுபநியினால் பாழடைந்து உள்ளது. இந்த உறைபனித் தாக்குதல் வட மாநிலங்களான, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் சாதரணமாக காணப்படும் விஷயமாகும்.

இந்த ஆண்டு, இந்தியாவி, மழை வளம் 29 % க்கும் குறைவாகவே பெய்தது. இந்திய தட்ப வெப்ப நிலை மைய த்தின் தகவல் இது. மழை எதிர்பார்க்கும்முன்னரே பொழிந்து, நிலத்தின் மேற்பரப்பு மண்ணை கடலில் கொண்டு போய் சேர்க்கிறது. எவ்வளவு தெரியுமா. ? ஒவ்வொரு ஆண்டும், 5,300,000,000டன் (5,30கோடி) மேல் மண்ணை வீணே கடலில் போய் கலந்து விடச் செய்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இது ஒன்றும் மாற்ற முடியாதது அல்ல. மனிதன் நினைத்து, நல்ல சரியான அணுகுமுறைகளை கையாண்டால் நிலத்தை காப்பாற்ற முடியும் என்று ஐரோப்பாவின் தேசிய நகர் புற சுழல் மையம் தெரிவிக்கிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து அபாயகர விளைவுகளும் சிதைவுகளும் சீதோஷன நிலை மாற்றத்தால் உண்டானவைகள் தான்.

சீதோஷன நிலை மாற்றத்தை சில பூச்சிகளின் வருகை கூட தெளிவாக தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பீச் மரம் மற்றும் உருளை கிழங்கு செடியில் சேதத்தை விளைவிக்கும் எபிட் (கிறிபிமிஞி) பூச்சிகளின் வருகை . வெப்பநிலையின் ஒரு டிகிரி உயர்வாலேயே. ஒரு வாரம் சீக்கிரம் வந்துவிட்டன. இந்த ஆண்டு முதல் எபிட், ஏப்ரல் 25 யே நாலு வாரத்துக்கு முன்பே , வந்துவிட்டதாம். கடந்த 45 ஆண்டு களில் இப்படி நிகழ்ந்ததே இல்லையாம். இப்படியான பூச்சிகளின் மற்றும் பறவைகளின் சீக்கிரம் இனப் பெருக்கம் செய்வதற்கும் வைரஸ் மற்றும் நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் வேகமாக பரவுவதற்கும் உயர்ந்து வரும் வெப்பநிலையே காரணம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்துமாபெருங்கடல் வெப்பமடைவதால், ஆப்ரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழையளவு குறைகிறது என நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக உணவுப் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதாம். பொதுவாகக் கடந்த 1980 களில் இருந்து கிழக்கு ஆப்ரிக்காவில் மார்ச் முதல் மே மாதம் வரை பேயும் மழை பதினைந்து சதம் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவது 20_25 ஆண்டு இடைவெளியில் தொரர்ந்துகொண்டே இருக்கிறது. 1950_2005 நடந்த ஆய்வறிக்கைகளின்படி, கிழக்கு ஆப்ரிக்காவின் பருவமழைக்கும், இந்தியப் பெருங்கடல் சூடாவதற்கும் நேரடித்தொடர்புள்ளது என தெரியவந்துள்ளது. எனவே உலகின் ஒரு பக்கத்தில் சூடவதினாலும்கூட உலகின் வேறு பகுதிகளில் அதன் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிகிறது.

இந்த நூற்றாண்டில் ஆர்டிக் கடல் சூடானதினால் கணவாய் மீன், நத்தைகள் மற்றும் பிற விலங்குகள் பசுபிக் கடலில் இருந்து வட அட்லாண்டிக் கடலில் வாழும் தன் குடும்ப மாமன் மச்சான்களை நோக்கி செல்கின்றனவாம். இவை சுமார் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆர்டிக்கை நோக்கி வந்தவைகளாகும். சீதோஷன நிலை அறிவியலாளர்கள் கி. பி. 2050 ல் ஆர்டிக் கடல் பனியற்று இருக்கும் என கணிக்கின்றனர். இதே நிலை ஆர்டிக் பிரதேசத்தில் சுமார் 3000000_3500000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாம்.

பசுபிக் கடலில் வாழ்ந்த உயிரினங்களும், வட அட்லாண்டிக் கடலில் வாழ்ந்த உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை என புதை படிமத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரா.சோ.மோகனா

Pin It