பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்ணும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

4000 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு மற்றும் இனிப்புகள் அவர்களின் 8 1/2 வயதில் மூளை வளர்ச்சி குறைபாட்டை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இத்தகைய உணவுகளை அவர்கள் உண்கிறார்களோ அவ்வளவு அவர்களின் பொது அறிவுத்திறன் குறைகின்றது.

ஆனால் பழைய முறைப்படி சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள் அவர்களின் அறிவுச் செயல்பாட்டை அதிகரிக்கும். இந்த ஆரோக்கிய உணவு வகைகள் அறிவுத் திறனை1.20 புள்ளிகள் அதிகரிக்கும். இந்த ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானதாக அமைகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்றாண்டுகளில் வேகமாக இருக்கின்றது.

இதைப்பற்றி ஆய்வு செய்த பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் கேடே நார்த்ஸ்டோன் கூறியதாவது: தற்கால பிரிட்டிஷ் குழந்தைகளின் சத்தற்ற, பதப்படுத்தப்பட்ட கொழுப்பும்,இனிப்பும் அதிகமுள்ள உணவு வகையே 8 1/2 வயதில் அவர்களின் அறிவித் திறனுக்கு காரணம் என்கிறார்.

மேலும் ஆரோக்கியமான உணவு வகைகள் அதிகபட்ச மூளை வளர்ச்சிக்கு உதவும். அதே வேளையில் சிறுவயதில் ஆரோக்கியமான உணவு முறை என்பதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் சத்தான உணவுகளை உண்ணும் அதே சமயத்தில் சில விருந்து உணவுகளை உண்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான உணவு முறைகளை பிரச்சாரம் செய்யும் அமைப்பினர் இந்த ஆய்வு மூலம் மேலும் ஊக்கமடைந்துள்ளனர். ஆயினும் சில நிபுணர்களோ உடனடி உணவு வகைகளை சார்ந்திருக்கும் சில பெற்றோருக்கு இது எரிச்சலூட்டும் என்கிறார்கள்.

தகவல்: எஸ். முத்துக்கண்ணன்

நன்றி: நியூஸ் ஒன்

Pin It