வாழும் வரை இரத்ததானம் - வாழ்க்கைக்குப் பிறகு கண் தானம் என்ற உயரிய நோக்கத்துடன் 1987ம் ஆண்டு துவக்கப்பட்ட  இரத்ததான கழகம். தான் கடந்து வந்த பாதையில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அவசர காலத்தில் பயன்படும் வகையில் இரத்ததானம் வழங்கியும் கண்தானம் செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி பலநூறு பேர் விழிக்கொடை பெற உதவியும் சுனாமி, பெருவெள்ளம் போன்ற இடர் காலங்களில் களத்தில் இறங்கி சேவை, சுய உழைப்பு கோட்பாட்டை வலியுறுத்தியும் இளைஞர் திரளின் ஆற்றலை தொடர்ந்து வெளிக்கொணர்ந்து வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வெள்ளி விழா ஆண்டின் துவக்க நிகழ்வாக கடந்த ஆகஸ்ட்7 அன்று வடசென்னை - ஏழுகிணறு பகுதியில் ஒரு மாபெரும் மனிதநேய விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இரத்ததான முகாமும் கண்தான, உடல் உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்வுக் கண்காட்சியும் சென்னையில் 1000 மரக்கன்றுகளை நடும் துவக்க நிகழ்வும் மேலும் இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விழிப்புணர்வு மலரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து டாக்டர் கே.கனகசபை அவர்கள் விழிப்புணர்வு மலரை வெளியிட ஹிதேந்திரன் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அசோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார் மேலும் (TANSACS) திட்டத் துணை இயக்குனர் ராணா பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன், DYFI மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக நமது மனிதநேயப்பள்ளியில் ஒரு மைல் கல்லாக அமையும் விதத்தில் (www.dyfidonors.org) என்ற மாநில இரத்ததான கழக இணையதளம் மெடிமிக்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் எ.வி. அனூப் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில் பொதுவான இளைஞர்கள் மத்தியில் அமைப்பை கொண்டு செல்லவும் நமது மனிதநேயப் பணிகளின்பால் அவர்களை ஈர்த்திடவும். தமிழகம் முழுவதும் உள்ள நமது தன்னார்வ இரத்தக் கொடையாளர்களின் தகவல்களுடன் அவசர இரத்த தேவைக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு பொதுச்சுகாதாரம் சம்பந்தப்பட்ட தகவல்களுடன் மேலும் பல்வேறு மருத்துவர்களின் கட்டுரைகள் என தகவல் களஞ்சியமாக மிகக் குறிப்பாக இளைஞர் முழக்கப் புத்தகத்தை இணையதளத்திலேயே பார்த்து வாசிக்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்த உதவியாக இங்கே சில அறிமுகங்களை குறிப்பாக வழங்குகிறோம் (www.dyfidonors.org) என டைப் செய்து இணையதளத்தின் உள்ளே போகலாம் முகப்பு பக்கத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. 1. (health) இந்த பக்கத்தில் பொதுச்சுகாதாரம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் மருத்துவர்களின் கட்டுரைகள் உள்ளன. 3.(gallery) இந்த பக்கத்தில் கடந்த கால இரத்ததானக் கழக நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. 4.(supporters) இந்த பக்கம் நமது ஆதரவாளர்களுக்கானது இதன் மூலம் அவர்களின் ஆதரவையும் நன்கொடைகளையும் வழங்கலாம். 5.(Contact us) இந்த பக்கத்தில் நமது அலுவலக விலாசம் தொடர்பு எண் மற்றும் மின் அஞ்சல் எண் உள்ளது.

அடுத்து இரண்டாவது வரிசையில் (Register to donate) என்ற பக்கத்தில் இரத்ததானக் கொடையாளராகப் பதிவு செய்ய படிவம் உள்ளது. அதில் உங்கள் பெயர் பிறந்த தேதி விலாசம் தொடர்பு எண், மின் அஞ்சல் விலாசம் போன்ற தகவல்களை பதிவு செய்து உங்களை தன்னார்வ இரத்ததானக் கொடையாளராக நீங்களே பதிவு செய்து கொள்ளலாம்.

அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படும் போது (search donor) என்ற பக்கத்தில் உங்களுக்கு தேவைப்படும் இரத்தப் பிரிவு எந்த மாவட்டத்தில், எந்த நகரத்தில் என தேர்வு செய்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள தன்னார்வ கொடையாளர்களின் தகவல்களும் அவரைத் தொடர்பு கொள்ள பொறுப்பாளரின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணும் வரும் உடனே அவரைத் தொடர்பு கொண்டு உங்கள் தேவையைச் சொல்லி மிக விரைவில் உதவி பெறலாம். முகப்பு பகுதியின் அடிப்பகுதியில் இளைஞர் முழக்கம் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தின் மேல் கிளிக் செய்தால் புத்தகம் பெரியதாக வாசிக்கும் வண்ணம் பெரிதாகத் தெரியும். பக்கங்களைத் திருப்ப அம்புக் குறிகளை இடப்புறமும், வலப்புறமும் அழுத்த வேண்டும் இதன் மூலமாக மிக சுலபமாக இளைஞர் முழக்கம் புத்தகத்தை நீங்கள் படிக்கலாம்.

இரத்ததானம் செய்வதற்கு ஏற்படும் தயக்கம் மற்றும் சந்தேகங்களைப் போக்க (FAQ) என்ற பக்கத்தில் உள்ள அடிக்கடி/ பெரும்பாலும் ஏற்படும் சந்தேகங்களை கேள்வி பதில்களை படித்து உங்கள் சந்தேகங்களையும் தயக்கத்தையும் போக்கிக்கொள்ளலாம். மேலும் நமது அமைப்பின் அன்றாட நிகழ்வுகள், கடந்தகால, எதிர்கால நிகழ்வுகளை இந்த தளத்திலே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Pin It