இளைஞர்களின் வேலை வாய்ப்பை மறுக்கும் மத்திய, மாநில அரசின் கொள்கைக்கு எதிராக வேலையின்மை எதிர்ப்பு கருத்தரங்கை சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிரம்மாண்டமாக நடத்தியது.

இக்கருத்தரங்கத்திற்கு தலைமைதாங்கிய தமிழ்நாடு அரசு ஊழியர்சங்க மாநிலத்தலைவர் இரா.தமிழ்செல்வி அவர்கள் அரசு என்பது மாதிரிப்பணி கொடுப்பவராக இருப்பதும் தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவதும் அவசியம் என்றார்.

உலகம் முழுவதும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றனர். அந்த நெருக்கடிக்கு யார் காரணம் ? சூத்திரதாரியார் என்பதை மட்டும் தெரிவிக்க மறுப்பதாக குற்றம் சாட்டினார் தமிழகத்தில் கலாநிதிமாறன் அவர்களின் சொத்துமதிப்பு 1082 கோடி ஆகும். ஆனால் 77.1 சதம் மக்கள் 20 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க வாய்ப்பு கிடைத்து புதுப்பித்த ஒருவருக்கு கூட வேலை கிடைக்க வில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து மாநில அரசு ஊழியர் சங்க அகில இந்தியப் பொருளாளர் கே. ராஜ்குமார் அவர்கள் வேலை என்பது அடிப்படை உரிமையாகும். வேலை கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் அரசின் கொள்கையே தவிர மக்கள் தொகை இல்லை என்பதை தெளிவு படுத்தி சீனாவின் அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சுமங்கலி திட்டத்தில் நடைபெறும் கொடுமைகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் நடப்பது என்ன? என்று கேள்வி எழுப்பி மறைமுகமாக உள்ள பணி நியமனத் தடையை விளக்கினார். வேலைவாப்பு என்பது எட்டாக்கனியாக இளைஞர்களுக்கு மாறிவரும் வேளையில் நாடாளுமன்றம் லிமிஜி விவாதிக்கிறது ஆனால் வேலை, உணவுகுறித்து விரிவாக விவாதிக்க மறுக்கிறது. எனவே மக்கள் தலைமைக்காக காத்திருக்க மாட்டார்கள் நாம் களத்தில் இறங்கி போராட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய சிவில் ஆடிட் அசோசியேசன் செயலாளர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் விடுதலைக்கு முன்பு காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்றுமா? என்ற கேள்வி எழுப்பினார்.

கிருஷ்ணா முந்த்ரா முதலாளியின் ஊழல் காரணமாக 5 கோடி முதலிட்டில் லிமிஜி தேசிய மயாமாக்கப்பட்ட நிறுவனமாக துவக்கப்பட்டது. பொதுத்துறையின் வளர்ச்சி என்பது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் 1991க்குப் பின் மத்திய அரசினால் அமலாக்கப்பட்ட தாராளமயக் கொள்கை இன்றைக்கு வெளிநாட்டு முதலீடு தொலை தொடர்பு உள்ளிட்ட அனைத்திலும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பாதுகாக்கப்பட்டதுறையினர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். இந்தியாவில் 10 கோடி பேரும், தமிழகத்தில் 62 லட்சம் பேரும், ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையே காரணம் என்றார்.

மத்திய அரசே தன்னுடைய பணியிடங்களில் 41/2 லட்சம் காலியிடமாக மட்டும்17,000 காலிப்பணியிடம் உள்ளது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பின்னடைவு பணியிடத்தைக் கூட நிரப்ப மறுத்து வருகிறது.

இத்தகைய நிலையில் இடதுசாரிகள் ஆட்சி நடத்தக் கூடிய கேரள மாநிலத்தில் அய்யன் காளி பெயரால் நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மிக முக்கியமான ஒன்று என்று சுட்டிக்காட்டினார். மாநில நிதி ஆணையம் கேரளத்திற்கான பங்கை ரூ 5000 குறைத்த போதும் அது மக்கள் நலனுக்காக பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

எனவே வேலையில்லா இளைஞர் பட்டாளம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருபகுதியே என்ற பி.டி. ரணதிவே கருத்தினை மனதில் கொண்டு போராட்டத்தை வலுப்படுத்துவோம் போராட்டம் நம்மை வலுப்படுத்தும் என சூளுரைத்தார்.

அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாள்ர் கே. ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய உரையில் 1:20 ஆக இருக்கவேண்டிய ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:40ஆக மாற்றி போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் சமரசம் செய்கிறது.

உலகஅளவிலான தாக்கம் காரணமாக அரசாங்கம் சீஞீகீ பட்ஜெட் சமர்ப்பிக்க உத்திரவிடுகிறது மனிதவளம் மிக்க நாட்டில் நிரந்தர ஒய்வூதியம் கூடாது என அறிவிப்பதோடு லட்சக்கணக்கான ஆசிரியர்களை ஒப்பந்த முறையில் பணியாற்றிடவைத்துள்ளது இதனால் அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் பணியை அரசினர் மேற்கொண்டு வருகிறது. ஒய்வுபெறும் ஆசிரியர்களின் பணியிடத்தை நிரப்பாமல் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து ஈடுகட்டி வருவதையும் அவர்சுட்டிக்காட்டினார் அனைவருக்கும் கல்வி சட்டம் நிறைவேற்றப்பட்டபின்னரும் 0முதல் 5வரை உள்ள குழந்தைகளின் வளர்ப்பு கல்வியை அரசு கைவிட்டு விட்டது. இதனால் 0+0+18 வரை இலவசமான, தரமான கல்விக்காக நாம் போராட வேண்டியுள்ளது.

மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக நாம் முன்னணிப் படையாக திரளும் போது வேலையின்மை எதிர்ப்பு நிறைவேறும் என்று பல்வேறு அனுபவத்தை முன்வைத்து நிறைவு செய்தார்.

ஞிஹ்யீவீ மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணண் தன்னுடைய உரையில் தமிழக சட்டமன்றத் திறப்பு விழாவிற்கு மறு நாள் விருந்து வைத்தது. சமீபத்தில் திரைக்கு வந்த அங்காடித் தெரு தமிழகத்தில் சுரண்டல் பலவகையாக உள்ளது இதனை உணர்ந்து உள்ளனரோ என்பதே கேள்வியாகும் இப்படம் அதனை உணர்த்தி உள்ளது.

அன்பு, பாசம், உழைப்பு என அனைத்தும் கொள்ளை அடிக்கிறது தேசிய மாதிரி அளவீட்டு நிறுவனம் வெளியிட்டு உள்ள புள்ளி விவரத்தில் 6% பேர் வேலையின்மையில் உழன்றுவருகின்றனர். தமிழகத்தில் 2% என குறிப்பிட்டு உள்ளது. இதில் ராமர்படம் வரைந்து பிழைப்பவரும் அடக்கமாகும். 1978 ஆம் ஆண்டு ஞிஹ்யீவீ நடத்திய சைக்கிள் பயணம் அன்றைக்கு முன்னேறிய நாடுகளில் தரப்பட்ட வேலையில்லாகால நிவாரணக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது. தற்சமயம் வேலையில்லாகாலநிவாரணம் மிக நீண்ட போராட்டத்திற்கு பின் குறைந்த அளவில் வழங்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் தேவைக்கு ஏற்ப புதிய அலுவலகத்தை திறக்க வேண்டிய அரசு, இருக்கும் அரசு ஊழியர்களை வெட்டிகழிக்கும் அரசாக உள்ளது. இதனால் குற்றச்செயல்கள் தமிழகத்தில் பெருகி வருகிறது.மன்னர்கள் மக்கள் உழைப்பை சுரண்டி கொழுத்தது போன்று இன்றைய ஆட்சி யாளர்கள் சிம்மாசனம் மீதான காதலால் மக்களை சுரண்டி வருகின்றனர் இக்கொடுமை யினால் 42% குழந்தைகள் எடை குறைந்து பிறக்கும் அவலநிலை இந்தியாவில் உள்ளது. பயனற்ற குழந்தைகள் பிறக்கும் நாடாக இந்தியா உள்ளது மிகவும் வேதனைக்குரியது இதனை மாற்றிட சாலைப் பணியாளர் போராட்டம் 170ஐ ரத்து செய்த போராட்டம் பெற்ற வெற்றிகளின் நம்பிக்கையில் நாம் போராடினால் வெற்றி உறுதி என உறுதிபட தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர். சினிவாசன் தன்னுடைய உரையில் கோவை மாநாடு தீர்மானித்த, மக்களை நோக்கிய பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து சென்று வலுவான இயக்கத்தைக் கட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

உற்பத்தி பெருக்க முயற்சி எடுக்காமல் லாபம், லாபம், கொள்ளை லாபம் என்பதையே குறிக் கோளாகக் கொண்டு செயல்படுவதால் மிகவும் மோசமான நிலை உள்ளது. நெகிழ்வான சந்தை என்ற கோட்பாட்டின் படி சமூகப்பாதுகாப்பான வேலையில்லாப்பட்டாளம் தேவை என்பதால் பாதுகாப்பு படையாக அதனை பயன்படுத்துகிறது. அலுவலகம் திற என்றால் அரசு வேலை திறந்து வருகிறது. திருமங்கலம் துவங்கி பென்னாகரம் வரை காலியிடத்தை நிரப்பும் அரசு, வேலையின்மையை ஏழைக்கு வீட்டுமனைப்பட்டா தராமல் விலிகிக்கு 2 கிரவுண்ட் நிலம் தருகிறது. வரையறுக்காமல் பல ஆயிரம் ஊழியர்கள் இருக்கும்போது விலிகி க்கு சம்பளம் உயர்த்துகிறது. என்றார் இந்த ஆட்சி யாருக்காக என்ற கேள்வியை எழுப்பி அடிப்படை பிரச்சனைத் தீர்க்கப் போராடுவோம் என்றார். நிறைவாக சிஐடியு அகில அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் அவர்கள் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலையில் இருப்பவர்கள் போராட வேண்டும் என்பதை சொல்லி வேலை யின்மை எதிர்ப்பு இன்றைய முக்கிய தேவை என தெளிப்படுத்தினார்.

சிஐடியு வின் 13வது அகில இந்திய மாநாடு தன்னுடைய 40 வது ஆண்டு இலக்கை அறிவித்துள்ளது. புதிய தலைமுறைக்கு இதனை கொண்டு சேர்ப்பதை ஓராண்டுகால இலக்காக தீர்மானித்து உள்ளது.

வேலையின்மை என்பது இன்றைய அடிப்படை பிரச்சனையாகும். எனவே, இதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. மன, திசை குழப்பம் இருந்தபோது சுதந்திரத்திற்காக ஒரே குரல் எழுப்பப்பட்டது. இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைத்தும் இருக்கிறது. ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறையாகவே உள்ளது. அமலாக்கப்பட்டுள்ளதா என்பதே கேள்வி ஆகும்.

வேலைநிறுத்தம் 1904 ஆம் ஆண்டு வ.உ.சி தலைமையில் கோட்ஸ் ஆலையில் நடைபெற்றது தொழிலாளி தன் உரிமையை எடுத்துக் கொண்டான். இன்றைக்கு வேலையில் இருப்பவர்கள் கவுண்டரில் முதலில் இடம்பிடித்து கொண்டுள்ளவர்கள்தான். எனவே, போராடுவோம் எழுவோம் என்ற நம்பிக்கை ஊட்டிப் போராடினால் வெற்றி நமக்குதான் என்பதை தமிழக அனுபவத்தோடு எடுத்துரைத்தார்.

அத்தோடு வறுமைகோட்டு கணக்கெடுப்பு, ரூபாய் 13 கிராமத்திலும், ரூபாய் 14 நகரத்திலும் சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு மேல் என்று குறிப்பிட்டிருக்கிறது என்றால் அரசியல் சட்டம் சொன்னதை தரவில்லை என சம்பந்தபட்ட அனைவருக்கும் உணர்வை உருவாக்கிட வேண்டியுள்ளது. மக்களிடம் கருத்துகள் போய்ச் சேர்ந்து இருந்தால் 15வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு இப்படி இருந்திருக்காது.

எனவே, நண்பன் யார்? எதிரி யார்? எனவும் நமக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. தேர்தலில் கூடுதல் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி உள்ளனர். இச்சூழலில் உலக தொழிலாளர் ஸ்தாபனம் என்பது கௌரவமான வேலை என்பதை முன்வைக்கிறது. ஆனால், இன்று 5 இட்லி சுட்டு அதில் 4 இட்லி விற்று மீதி 1 இட்லி சாப்பிட்டு மறுநாள் 5 இட்லி சுடுவது என தொடரும் வாழ்க்கையாக உள்ளது வேலை.

உச்சநீதிமன்றம் அரசினை மாதிரி தொழில் அளிப்பவர் என்கிறது. ஆனால், அதனை தற்சமயம் அரசு செய்யாமல் முழுநேரமும் பணிபுரிபவர்களை பகுதி நேர ஊழியர் என்கிறது அரசு. எனவே, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கு சோவியத் யூனியன் நிறைவேற்றமுடிந்தது என்றால் ஏன் இந்தியாவில் முடியாது?

அதற்கு அந்த சோசலிச சமூக அமைப்பு இந்தியாவிற்கும் வேண்டும் அதுவே தீர்வாகும் என சிறப்புமிக்க உரையாற்றினார்.

Pin It