1992 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் துவக்கிய முரளிதரன் முதல் நூறு விக்கெட்டுகளை எடுப்பதற்கு ஐந்து ஆண்டு களை எடுத்துக் கொண்டார். ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளில் மேலும் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இளம் வயதிலேயே 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார்.

ஒரு கட்டத்தில் யார் அதிக விக்கெட்டுகளைப் பெறுவார்கள் என்பதில் ஷேன் வார்னே மற்றும் முரளிதரன் ஆகிய இருவருக்கிடையில் போட்டி இருந்தது. ஷேன் வார்னே முந்திக் கொண்டாலும் 708 விக்கெட்டுகள் எடுத்துவிட்டு தனது ஓய்வை அவர் அறிவித்தார். தொடர்ந்து ஆடிய முரளிதரன் 800 என்ற இலக்கையும் தொட்டுவிட்டார்.

ஒரு நாள் போட்டியிலும் அவர்தான் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவருக்கு முன்பாக பாகிஸ்தானின் நட்சத்திர ஆட்டக்காரர் வாசிம் அக்ரம் வசம்தான் அந்த சாதனை இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அந்த சாதனையை முறியடித்த முரளிதரன் 515 விக்கெட்டுகளை எடுத்து இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒருநாள் போட்டியிலிருந்து அவர் ஓய்வு பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் ஆட்டக்காரர். ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் (515).

Pin It