சாந்தியாகு வில்சன் பெர்னாண்டோ

 12/9/2011

கூடன்குளம் அணு உலையை மூட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடக்கும் போராட்டத்தையட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. கூடன்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இடிந்தகரை கிராமத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

குமரி மாவட்டத்திலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது: உலகநாடுகள் அணுஉலையை மூடிக்கொண்டிருக்கும் வேளை யில் இந்தியாவில் அணுஉலையை திறப்பது சரியல்ல.

13 ஆயிரம் கோடி செலவிட்டதாகவும், அதனால் அணுஉலையை மூடுவது கடினம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி மதிப்புள்ள உயிர்கள் தான் முக்கியம். நாங்கள் காந்திய வழியில் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

மீனவர்களின் வாழ்வாதாரமே கடலில் மீன் பிடிப்பது தான். எனவே அணு உலையை மூட மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அரிகரசுதன்

கூடங்குளத்தில் ஏதோ ஒரு வகையில் விபத்து நடந்தால் என்ன மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்கின்ற முன்தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா “ என்று நாகர்கோவில் முனைவர் சு.ப.உதயகுமாரன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையை பயன்படுத்தி தீயணைப்புத்துறை, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், துஊத்துக்குடி மாவட்ட நிர்வாகம், கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகம் என அனைவருக்கும் எழுதி கேட்டிருக்கின்றார். ஆனால் எவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவும் செய்யாது, என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும் இல்லை, இது தொடர்பாய் எந்த தகவல் பரிமாற்றமும் கூட நடைபெற்றிருக்கவில்லை.

பன்னீர் குமார்

எவனுக்கொ மின்சாரம் கிடக்க நாங்கள் சாகவேண்டுமா அன்னா ஹசாறெவை ஆதரித்து நெல்லை முழுதும் சுவரொட்டி ஒட்டிய ரஜினி, கமல், விஜய், இன்ன பிற ரசிகர்களே உங்கள் அருகில் உங்களுக்கும் சேர்த்து போராடும் எந்த மக்களின் உங்கள் தலைவர்களின் நிலை என்ன?  

அந்தோணி பெர்னான்டோ

கூடங்குளத்தை கட்டி கொள்ளட்டும் ஆனால் உயிரை பணயம் வைக்கிற அந்த பகுதி மக்களுக்கு அணுமின் நிலையத்தில் இருந்து வரும் வருமானத்தில் என்பது விழுக்காட்டை தருவார்களா . அப்படி செய்தால் தாராளமாக வைத்து கொள்ளட்டும்.

 அருள் எழிலன்

மாவட்ட ஆட்சித் தலைவர் என்பவர் இந்திய அரசின் ஒரு ஊதுகுழல் அவ்வளவே.... அரசு நிர்வாகம் சொல்கிற எதையுமே நம்ப முடியாது நம்பவும் கூடாது. கடந்த முப்பதாண்டுகாலத்தில் நமது மீனவ மக்களின் வாழ்வை இந்த அரசு எவ்வளவு நசுக்கி நாசமாக்கியிருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். மீன் பிடிக்கவோ, வலைகளை உலர்த்தவோ, வீடுகளை அமைக்கவோ நாம் இவர்களிடம் உரிமை கேட்கவில்லை. பாரம்பரீயமாக நமது முன்னோர்களின் வதிவிடம் அது. அதில் வாழவும் மீன் பிடிக்கவும் எவனிடம் உரிமை கேட்க வேண்டும். பிரச்சனை அதுவல்ல அணு உலை என்பது வளர்ந்த நாடுகளாலேயே மூடப்பட்டு வரும் ஒன்று, அதைக் கொண்டு வந்து மக்கள் குடியிருப்புகளில் அமைக்காதே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு. தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை நமது விஞ்ஞானிகள் எப்போதோ கண்டு பிடித்து விட்ட நிலையில் யாருடைய நலனுக்காக இந்த உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படுகின்றன?

சாந்தியாகு வில்சன் பெர்னாண்டோ

தமிழக அரசே... கூடங்குளம் அனு மின் நிலைய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயாரா ?

அரிகர சுதன்

 கூடங்குளம் அணுமின் நிலையைத்தை நிறுத்திய பின் என்ன செய்யலாம்?

அங்கே அணுவிஜய் குடியிருப்பை உயர்ந்த பணியாளர்களுக்காக கட்டி கொடுத்திருக்கின்றார்கள். அது போலவே மிகவும் உயர்தரம் என்று சொல்லக்கூடிய மிகப் பெரிய கட்டிடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. அவைகளில் பல நவீன வசதிகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

1. தென்தமிழகம் சித்த மருத்துவத்திற்கும் மூலிகைகளுக்கும் பிரசித்தி பெற்ற பகுதி என்பதனாலும் கூடங்குளத்தில் நாம் உலகளாவிய இந்திய சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைத்துவிடலாம். (கட்டிடங்கள் ஏற்கனவே இருக்கின்றன)

2. பாரம்பரிய சித்த மருத்துவ ஏடுகள், ஆவணங்களை பாதுகாக்ககூடிய ஒரு ஆவணக் காப்பகம் வைக்கலாம்.

3. தென் தமிழர்களுக்கு ஒரு பெரிய நூலகம் இல்லாமல் சென்னையை நோக்கி படையெடுக்க வேண்டியது மிகச் சிரமமாயிருக்கின்றது. எனவே உலகத் தரத்தில் ஒரு நூலகத்தை கூடங்குளத்தில் அமைக்கலாம்.

4. அணுவிஜய் குடியிருப்பை சித்த பல்கலைக்கழக பணியாளர்களுக்கான குடியிருப்புகளாகவும், மாணவர்களுக்கான விடுதிகளாகவும் மாற்றிவிடலாம்.

5. உலக நாடுகள் பலவற்றிலிருந்து மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஏற்ப பல வசதிகளை அக்குடியிருப்புகள் பெற்றிருப்பதால் வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக வந்து படித்துச் செல்வார்கள்.

ஏற்கனவே பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் வந்து நமது மருந்துகளை திருடிக்கொண்டு செல்கிறார்கள். காப்புரிமை வாங்கிவிட்டு நமக்கே எச்சரிக்கை விடுகிறார்கள். ஆனால் அதை தடைசெய்து நம்மிடம் அவர்கள் படிப்பதன் மூலம் நாம் முதலில் ஆய்வுகளை முறைபடுத்துவோம்.

6.இப்படி இந்த உலகத்துக்கு பயன்படக்கூடிய, தமிழ் பாரம்பறிய மருத்துவ அறிவு உலகத்திற்கு பயன்படக்கூடிய, ஏமாற்று அலோபதி மருத்துவர்களின் பணப்பறிப்பை தடுப்பதற்கான என பல நல்ல பயன்பாடுகள் இதன் மூலம் ஏற்படும் என்பதால், நான் இதை முன் மொழிகிறேன்.

Pin It