கீற்றில் தேட...

 

சுற்றுப் புறங்களில் தொற்று நோய் ஏற்பட்டுள்ள போது தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். என எண்ணும் எண்ணம் சரியானதுதான் என்றாலும் அந்த எண்ணத்தைச செயல்படுத்துவதில் தான் பல தவறுகளைச் செய்கிறார்கள் அதிகப்படியாக பூதகரமாக வர்ணித்து மக்களை பீதியில் ஆழ்த்தி நோய்க்கு மருந்தில்லை. ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்பது போன்ற படுமோசமான பித்தலாட்டத்தைச் செய்து கால் காசு பெறாத இரசாயணக் குப்பைகளை பல்லாயிரம் மடங்கு விலைகளில் விற்று பண அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது.

       பன்னாட்டு ஆதங்கில மருத்துவ மோசடி, வணிகங்கள நமது அரசுகளையும் அதிகாரிகளையும் (ரோட்டரி லயன்ஸ்கிளப் போன்ற) தொண்டு நிறுவனங்களையும் வளைத்துப் போட்டு குளிர் காய்கின்றன. அப்பாவி பொது மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் உடல் நலமும் பொருளாதாரமும் இவ்வணிகர்களின் அடாவடிச் செயலினால் அடித்து நொறுக்கப்படுகிறது. (கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லாநிலைதான்)

       நோய் ஏற்பட்ட பின் மருத்துவம் என்பதை விட அந்த நோய் ஏற்படாமல் தடுப்பதுதான் இறப்பானது (PREVENTIVE IS BETTER THAN CURE) என்னும் சிறந்த கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கொடும்

       அதாவது எதிர்காலத்தில் எந்த வகையான துன்பம் (நோய்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே யூகித்தறிந்து அத்துயரம் ஏற்பட்டு விடாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத மனிதனின் வாழ்க்கை நெருப்புக் கருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போலக் கருகிவிடும் எனப் பேசுகிறார்.

நோய் வரும் காப்பது எப்படி?

       மனிதன் நோயடைதல் என்பதற்கான பல்வேறு வகைகளிலான காரணிகள் உள்ளன. இக்காரணிகளில் தலையாய காரணியாக உள் உடல் சுத்தமின்மையை மட்டுமே கூறலாம். உள்உடல் சுத்தமில்லாதவர்களை தொற்று நோய் களோ பிற நோய்களோ பாதிப்பதில்லை. இன்றைய நாட்களில் சுற்றுப்புறத் தூய்மை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஓரள வுக்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆனால் உள் உடல் தூய்மையûயும் வகைகளிலான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

       புறஉடல் தூய்மை அமோகமாக நடைபெறுகிறது. ஆனால் உள் உடல் தூய்மை?

       தொற்று நோய்கள் கிருமிகளினால் தான் ஏற்படுகின்றன. (வைரஸ்கள்) நீர், காற்று உணவுகளினால் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களினால் இக்கிருமிகள் மிக வேகமாக பரவி மனிதனுக்குத் தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதாக ஆங்கில மருத்துவம் பேசுகிறது. இக்கருத்து சரியானதுதான் எனில் சுற்றுச்சூழல் கெட்டுள்ள பகுதியில் வசிக்கும் ஒருவர் தொற்று நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருடன் அதே பகுதியில் வசிக்கும் மீதமுள்ளவர்களை அக்கிருமிகள் தாக்கி நோயடையச் செய்யாத மர்மம்தான் என்ன? (ஒருவரைத் தவிர மீதமுள்ள வர்கள் வைரஸ்களின் அன்பான நண்பர்களா? அல்ல உறவினர்களா?) வைரஸ்களால் அனை வருக்கும் ஒன்று போலல்லாவா தொற்று தாக்கப்பட வேண்டும்? அவ்வாறு ஏன் ஏற்பட வில்லை? இதற்கான விடை விஞ்ஞான அறிவியல் மருத்துவமான ஆங்கில மருத்துவத்திடம் இல்லை.

       ஒரு விதை முளைப்பதானால் அதற்குச் சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே முளைக்கிறது (சூரிய ஒளி அல்லது வெப்பம், நீர், நிலம், காற்று) இவைகளில் ஏற்றக் குறைபாடு இருக்குமானால் விதை முளைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதே போல் கிருமிகள் வைரஸ்கள் இவ்வுலகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளன. ஏன்? மனித உடலினுள்ளும் உள்ளன. ஆனால் உள் உடல் தூய்மையாக இருக்குமானால் அக்கிருமிக ளினால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுவதில்லை. உள் உடலில் தூய்மை குறைந்து அழுக்குகள் சேர்ந்து அவை கிடந்து அழுகி விடுமானால் கிருமிகள் வெளியிலிருந்து உடலுக்குள் வந்து தனது வேலையைத் தொடங்க வேண்டியதில்லை. உடலுக்குள் பலகாலமாகத் தங்கியுள்ள கிருமிகளின் கூட்டம் அவ்வழுகல்களை உண்டு கொழுத்து தொற்று நோயை ஏற்படுத்துகிறது. (அதாவது கிருமிகளுக்கு சாதகமான சூழ்நிலை என்பது உள் உடல் தூய்மை குறைவாகும்)

       மனித உடலில் பல்வேறு வகைகளிலான கிருமிகள் உள்ளன. அவைகளில் ஒரு சில வகை கிருமிகள் மனிதனுக்குப் பற்பல நன்மைகளைத் தருகதின்றன. அதாவது பெருங்குடலில் தங்கியுள்ள ஒரு வகை கிருமிகள் விட்டமின் உற்பத்தி செய்கிறது. இவ்வகைச் சத்துப் பொருளில் சிறு அளவு தினசரி மனிதனுக்குத் தேவைப்படுகிறது. இச்சத்து மனித உடலில் தேக்கப்படுவதில்லை என்பதினால் அன்றாடம் மிகச்சிறு அளவில் மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். உட்கொள்ளப்படும் உணவுகளில் இச்சத்தை ஓரளவுக்கு அடையப் பெற்றாலும் பெரும்பாலும் பெருங்குடலில் கிருமிகளினால் உற்பத்தி செய்யப்படும் இச்சத்து மினத உடலின் தேவைகளை நிறைவு செய்கின்றன.

       தொற்று நோய்த் தடுப்பு என்ற பெயரில் ஆங்கில மருத்துவ முறையில் மட்டுமே பலவந்தத் திணிப்பாக மனித உடலில் தடுப்பு மருந்துகள் திணிக்கப்படுகின்றன. கடுமையான வேதி மருந்து களான இவைகள் மனித உடலுக்கு வரம்பு மீறி அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தீமை செய்யும் கிருமிகளை அழித்து ஒழித்து விடுவதின் காரணமாக (ANTIBIOTIC) தடுப்பு மருந்தை பயன்படுத்தும் மனிதன் நோயெதிர்ப்புத் திறனை இழந்து பல்வேறுவகை நோய்க்கூட்டத்துடன் போராடி தோற்று ஆங்கில மருத்துவ வணிகர்கள் செல்வச் செழிப்பில் வைத்திருக்கும் பொன் முட்டையிடும் வாத்து போலாகிறான்.

       மூளைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், மேலும் புதியதாக குரங்குக் காய்ச்சல் என ஆங்கில மருத்துவம் தனது வழக்கமான மிரட்டல்களைக் காட்டி வணிகவலை வீசப்பட்டு அச்சத்துடன் மக்களை முட்டாள்களாக்கும் செயல் தொடர் கிறது. (இன்றைய கல்விமுறை படித்ததை ஒப்பு விக்கும் (கிளிப்பிள்ளைகள்) திறமையை மட்டுமே வளர்த்து வருகிறது. சுய சிந்தனையாற்றலைத் தூண்டி அதை மேம்படுத்தும் வகையிலான சிறந்த கல்வி முறை இன்று நடைமுறையில் இல்லை. எதிர்வரும் காலத்தில் இருளான சூழ்நிலை மாறி நல்லொளி பரவும் என நம்புவோம்)

 

ஹோமியோ மருத்துவ முறையில் நோய்த் தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

 

       ஹோமியோ தோன்றி முன்னூறு ஆண்டு களுக்கு முன்னர் தந்தை ஹானிமன் ஹோமியோவைக் கண்டுபிடித்து இவ்வுலக மக்களுக்கு அர்ப்பணித்தார். ஹோமியோபதிக் கான கோட்பாடுகளையும் அவர் அளித்தார். எனது வாழ்நாளில் இயன்ற வரையிலும் ஹோமியோவை முழுமையாக வழங்கிவிட்டேன் எனினும் பின்வரும் சந்ததயினர் இக்கலையை மேன் மேலும் ஆய்ந்து மேம்படுத்த வேண்டுமெனக் கூறினார்.

       நோயடைந்த மனிதனை நோயற்ற வனாக்குதல் என்பது ஹோமியோ கோட்பாடு அதாவது நோயடைந்த மனிதனிடம் ஏற்படும் குறிகளைக் கணக்கிலெடுத்து ஆய்வு செய்து பொருத்தமான ஒரு மருந்தைக் கொடுத்து பழுதுபட்ட உயிராற்றலை பழுது நீக்குதலின் வழியாக நோயற்ற மனிதானக்குதல் என்பது ஹோமியோவின் கோட்பாடு என்பதினால் நோய்த் தடுப்பு மருந்துகள் எனப்படும் கோட்பாடு தந்தை ஹானிமன் காலத்தில் இல்லை. பிற்கால கால கட்டத்தில் ஹோமியோவை மறு ஆய்வு செய்த பல ஹோமியோ மேதைகளும் தத்தமது படடறிவின்படி தொற்று நோய்த் தடுப்பு மருந்துகளை அறிவித்துள்ளார்கள். அவற்றைப் பார்க்கலாம்.

       ஆங்கில மருத்துவ நோய்த்தடுப்பு மருத்துவர் கள் ஆபத்தான பக்க விளைவுகளைத் தவறாமல் ஏற்படுத்தும். விலையுயர்ந்த இவ்வேதிதடுப்பு மருந்துகளை உடகொண்டவர்களுக்கும் குறிப் பிட்ட அதே நோய்த் தாக்குதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

       ஆனால் ஹோமியோ தடுப்பு மருந்துகள் பக்க விளைவுகள் இல்லை. விலை மலிவானது. ஆபத்தில்லாதது. சுற்றப்புறங்களில் தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ள காலங்களில் ஹோமியோ தடுப்பு மருந்தை தினசரி ஒரு டோஸ் வீதம் மூன்று நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் (தொடர வேண்டிய அவசியமில்லை)

1.     மலேரியா தடுப்பு மருந்து   -     CEDRON 30C தினசரி ஒருடோஸ் மூன்று நாட்கள் மட்டும். 

2.     டைபாய்ட்  -     TYPOIDINUM – 30C மூன்று டோஸ் (நாட்கள்) 

3.     கக்குவான் இருமல்    -     CORRALLIUM - 30 

4.     காலரா    -     VERATRUM ALB - 30 

5.     தட்டம்மை (விளையாட்டம்மை)   -     PULS - 30 தினசரி ஒருடோஸ் வீதம் மூன்று நாட்கள் மூன்று நாட்கள் இடைவெளிக்குப்  பிறகு தினசரி ஒருடோஸ் வீதம் மூன்று நாட்கள் மட்டும் 

6.     பொன்னுக்கு வீங்கி    -     PILOCRAB – 30C தினசரி ஒருடோஸ் மூன்று நாட்கள் நான்குநாட்கள் இடைவெளிக்குப்                        பிறகு தினசரி ஒரு டோஸ் மூன்று நாட்கள். 

7.     டிப்தீரியா (தொண்டை அடைப்பான்)     -     APISMEL 30C தினசரி ஒரு டோஸ் மூன்று நாட்கள் 

8.     இளம்பிள்ளை வாதம் (போலியோ) -     – LATHRUS 30C