 |
கவிதை
இடையினம் சேரன்
இயற்கை செய்த தவறு;
தண்டனை எங்களுக்கு!
விலங்குகளில்கூட
ஆண், பெண் மட்டும்தான்
மனிதர்களில் மட்டும் ஏன்
ஆண், பெண், அலி?
உடல் விற்கும் தேர்வில்கூட
மதிப்பெண்களே போடுவதில்லை..
‘விபச்சாரி பட்டம்' கூட
இன்றுவரை கிடைக்கவில்லை...
சாதி மறுப்பு திருமணத்திற்கு
அரசு சலுகை உண்டாம்
எங்கள் திருமணத்தைப்
பதிவுகூட செய்ய இயலாது...
வாக்குரிமை கோரினோம்
முதல்வராக அல்ல; மனிதராக
குடும்ப அட்டை தான்கிடைத்துள்ளது
கும்பிடுகிறோம் கலைஞரை!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|