சித்திரை வெய்யில்
எஸ். செந்தில்குமார்
ஸ்தனத்தில் வந்தமரும் குருவியினை
விரட்டுகிற குழந்தை
வலது பக்கத்தினை வருடிக்கொண்டே
இடதில் சுவைக்கிறது
உதிரிப்பூக்களைத் தொடுக்கும் கோடை மதியத்தில்
உதிரிகளை இறைத்துப்பின்
பொறுக்கிக்கொள்ளத் தவழ்கின்றன
முட்டுத்துணி
சலவைக்குப்பின் உலர்ந்து கொண்டிருக்கிறது
வேதனையோடு ஈரம் சொட்டியபடி
உதிரிப்பூக்கள் விற்பவன் தெருவின் நிழலில்
சில்லறைகளை எண்ணிக் கொண்டிருக்கிறான்
இந்த கோடை மதியத்தில்
சூடுப்பிடித்து மூத்திரம் கடுத்த யுவதிகள்
நீர் மோரை கண்மூடி குடிக்கின்றனர்
கோடை மதியம் உறக்கத்திற்கு ஏற்றதல்ல
என்று தொடர்கதை பைண்டுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்
பேரிளம் பெண்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|