 |
நூல் வெளியீடு
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட 5 நூல்களை ஏப்ரல் 30 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வெளியிட, தோழர் சிங்காரவேலு பெற்றுக் கொள்கிறார். அருகில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் மோகனன்.
இன்னொரு சென்னை, க. மாதவ். ரூ. 5
சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பகுதியோரின் வாழ்க்கை மனித நாகரிகத்தையே ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. கழிதல் பொதுவில் வெளியில். குளியல் பெண்களானாலும் தெருவில்தான். பெரும்பகுதி குடும்ப உறுப்பினர்களின் தூக்கமும் தெருவில்தான். விருந்தினர் வந்தால் துணிகளை மாற்ற பெண்களின் அவஸ்தை சொல்லிட மாளாது. இந்த அறைகள் அற்றக் குடியிருப்புகளின் வாழ்க்கை பலவகைப் பாலியல் வன்முறைகளுக்கும், உறவு வக்கிரங்களுக்கும், சண்டைகளுக்கும், கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் ஊற்றாய் அமைகிறது.
அரசு வாக்குறுதி வேலை பறிப்பு, எஸ். கண்ணன். ரூ. 5
காங்கிரஸ்_தி.மு.க அரசின் கொள்கையினால் வேலை வாய்ப்பு எந்தளவு பறிக்கப்பட்டுள்ளது என்பதை விவரிக்கிறது.
இருட்டை கொண்டு வந்த உதயசூரியன், கே. விஜயன். ரூ. 5
2007ஆம் ஆண்டிலிருந்து தமீழகத்தை மீன் வெட்டு ஆட்டிப் படைக்கின்றது. ஏன் இந்த மீன் பற்றாக்குறை தமீழகத்தில் ஏன் ஏற்பட்டது? மீன்சாரம் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வேலையிழப்புகள், உற்பத்தி முடக்கம் எல்லாவற்றையுமே தமீழகம் தற்பொழுதும் அனுபவித்து வருகின்றது. இது எதனால் ?
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், அன்வர். ரூ. 5
1947 முதல் 2007 வரை நாட்டில் நடந்த ஒட்டுமொத்த ஊழலைக் காட்டிலும், பெருக்கினாலும் வராத தொகை. திரைமறைவில் பலன் பெற்ற அரசியல் புள்ளி யார்? அந்த நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை அரபு நாட்டு கம்பெனிக்கு விற்றுவிட்டதே...! நான் உரிமம் கொடுப்பேன். மற்றதெல்லாம் நிதியமைச்சகம்தான் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் ராசா சொல்கிறாரோ? அது எப்படி?
உடல்நலம் மருந்துகள் அரசியல், எஸ். சுகுமார். ரூ. 5
அரசு மூலம் ஆராய்ச்சி செய்து புதிய மருந்தினை கண்டுபிடித்து இதை மிகக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்கள் வாங்கி பன்மடங்கு விலையில் விற்று நோய்வாய்ப்பட்ட மக்களை கொள்ளை யடிக்கிறது.. இதற்கு சாதகமான சட்டங்கள் அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளில் உள்ளது. இதற்கு ஏற்ற அமைப்புதான் இந்தியாவிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|