முதுபெரும் நாவலாசிரியர் இராஜம் கிருஷ்ணன் நூல்கள் நாட்டுடைமை
தமிழிலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்-தளித்தவர் இராஜம் கிருஷ்ணன் அவர்கள். ‘பாதையிற் பதிந்த அடிகள்’ (மணலூர் மணியம்மை வரலாறு), ‘முள்ளும் மலர்ந்தது’ (சாம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர் குறித்த நாவல்), ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’, ‘அலைவாய்க் கரையில்...’ ‘குறிஞ்சித்தேன்’, ‘மலர்கள்’, ‘விலங்குகள்’ _ போன்ற இவரின் நாவல்கள் குறிப்பிடத்-தக்கவை. ‘வீடு-’ என்ற இவரின் நாவல் மத்திய தரவர்க்கப் பெண்களின் வாழ்வியலை மனம் நெகிழச் சித்தரிப்பதாகும்.
இவரது அனைத்துப் படைப்புக்களும் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. நாட்டுடைமை ஆக்கத் துணை நின்ற தமுஎகச அமைப்பிற்கு ‘புத்தகம் பேசுது’வின் வாழ்த்துகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|