 |
‘கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்’
இந்தியாவில் சாதியுடன் வர்க்கப் பிரச்சினைகளை பற்றி முதலில் பேசிய ஒரே தலைவர் சிங்காரவேலர் என்று சிலர் கூறுகிறார்கள். 1930-36-ல் அவர் எழுதிய கட்டுரைகளை அதற்குச் சான்றாகக் கூறுகிறார்கள். காங்கிரசிலும், கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்பு நீதிக்கட்சியிலும் மாறுபட்ட கொள்கையுடன் இருந்தவர் சிங்காரவேலர்.
சிங்காரவேலர் வந்தவுடன்தான் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிஸ்டு இயக்கத்திலும் பெரும் தாக்கம் ஏற்பட்டதாகச் சிலர் எழுதுகிறார்கள். சிங்காரவேலர் நுழைவுக்கு முன்பே 1925-லேயே தனது குடியரசு இதழில் சோசலிசம் பற்றிப் பெரியார் எழுதியிருக்கிறார்.
1927-ல் தனது ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழை, ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய பெரியார், அதன் இரண்டாமாண்டு தினத்தில்கூட ரஷ்யப் புரட்சி தினத்தன்று சென்ற ஆண்டு இந்த இதழைத் தொடங்கியதை நினைவுபடுத்தியுள்ளார்.
ஈ.வி.ஆர். என்ற பெயரில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையை சிறு நூலாக வெளியிட்டுள்ளார்.
ரஷ்யப் புரட்சி போல் இந்தியாவிலும் புரட்சி ஏற்படாததற்கு, மதம், ஆண்-பெண் வேறுபாடு, சாதிய முரண்பாடுகளே காரணம் என்பதை பெரியார் உணர்ந்து வேலைத் திட்டங்களை வகுத்திருக்கிறார்.
சிங்காரவேலருக்கு முன்பே பல்வேறு கொடுமைகளை, நிலவும் வேறுபாடுகளை பெரியார் அம்பலப்படுத்தியுள்ளார். சில வேளைகளில் சில வேலைத் திட்டங்களுக்கு அழுத்தம் தந்து இயங்குவார்.
செயலுத்தி! மூலவுத்தி! வேலைத்திட்டம்! தந்திர உத்தி! சண்டை வரம்பு.... போன்ற புரட்சிகர வரையறைகளுடன்தான் பெரியார் செயல்பட்டிருக்கிறார்.
இதன் குறிக்கோள் பார்ப்பான் - பறையன் பேதம் ஒழிய வேண்டும், ஆண்-பெண் வித்தியாசம் அகல வேண்டும், ஏழை பணக்காரன் வேறுபாடு நீங்க வேண்டும் - இதுதான் பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை சமதர்மம்!”
ஒவ்வொரு முறையும் பெரியாரின் எழுத்துக்களைப் படிக்கும்போதும், ஆய்வு செய்யும் போதும் அவர் புதுமையான மனிதராகக் காட்சியளிக்கிறார். ஒரே கருத்து திரும்பத் திரும்ப வருவது போல் தெரிந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு விதமாகக் கருத்துக்களைக் கூறுவார்.
பெரியாரின் பேச்சை சில முறை அவரது காலடியில் இருந்து நான் கேட்டிருக்கிறேன்.
எல்லோரையும் தகர்க்கின்ற, மிகுந்த நகைச்சுவை உணர்வு மிளிர உரையாற்றும் இது போன்ற ஒரு தலைவர் உலகில் வேறு எங்காவது இருப்பாரா என்றால் இல்லை என்றே நான் கூறுவேன். அவரது பேச்சைக கேட்டு சில நேரங்களில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
எஸ்.வி.ராஜதுரை உரையிலிருந்து
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|