 |
கட்டுரை
வெளியேறு.. விழியன்
இதென்ன வழக்கம்
என்னுடனே பயணிக்கும் பழக்கம்
கை நீட்டினால் நீயும்
உதைத்தால் நீயும்..
நடந்தால் நீயும்...
நின்றால் நீயும்..
கொஞ்சம் தனிமையில் விட்டுவிடு
எனக்குள் நானே
அழுவதை சிரிப்பதை
போரிடுவதை சமாதானமாவதை
கேள்வியிடுவதை பதில் பெறுவதை
யாரும் காண வேண்டாம்
வேண்டாம் நீ
போ...தூரப் போ
நிஜத்தோடு மட்டும் வாழ ஆசை..
- விழியன் (umanaths@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|