 |
கவிதை
சோ.சுப்புராஜ் குறுங்கவிதைகள்
நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை
அபாயங்களின் விளிம்புகளுக்கு;
நானும் மற்றவர்களை.....!
******
யாவரும்
கடந்து போகிறார்கள்
புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்.....!
*****
விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் -
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி.....!
*****
விட்டில் பூச்சிகளுக்கு
விஷமாகும் வெளிச்சம்;
ஒளிமயமான வாழ்வுக்கும் உவமையாகும்.....!
- சோ.சுப்புராஜ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|