 |
கட்டுரை
தம்பி - 51 சுபவீ
நேரில்
உன்முகம் பார்த்ததில்லை
நினைவில்
உன்முகம் மறந்ததில்லை
வயதில்
எனைவிடச் சிறியவன்நீ
வாழ்வில்
எவரினும் பெரியவன்நீ
அறமும்
அகிம்சையும் தோற்றபின்னர்
அறுவை
முறையே ஏற்றதென
ஆயுதம்
கைகளில் ஏந்திவந்தாய்
அக்கினி
ஆற்றில் நீந்திவந்தாய்
எத்தரின்
தலைகளை வாங்கியவாள்
எத்தனை
துயரம் தாங்கியதோள்
அத்தனை
துயரிலும் உடன்நின்றார்
மொத்த
ஈழத் தமிழ்மக்கள்
இடிந்தது
எதிரிகள் ஈனத்தனம்
விடிந்தால்
வெல்லும் உன் ஈழத்தவம்
விரைவில்
இறுதிப் புயல்வீசும்
வேங்கைகள்
ஆள்வார் தமிழ்த்தேசம்
- நவம்பர் 1, 2005
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|