 |
கட்டுரை
பயணம் த.சரீஷ்
என்ன இது என்ற
இதுவரை
பதில் கிடைக்கப்படாத
கேள்வியோடு
வளமையான பயணம்
தொடர்கிறது இன்றும்.
தினமும் இப்படித்தான்
நெரிசல் நிறைந்த நிலையில்
அமைதி கலைந்த பொழுதில்
குழப்பமான மனநிலையில்தான்
தெளிவில்லாத பயணம்
என்றும் எனக்கு.
வாழ்க்கைபற்றி
யாருக்குத் தெரியும்...?
திடீரென்று இந்தக் கேள்வி
என் காதுகளை வந்தடைகிறது..??!!
சனநெரிசல் நிறைந்த பயணத்தில்...
யாருடனும் அல்லாது
தனிமையில்....
இடைவிடாமல் ஒரே கேள்வியை
கேட்டுக்கொண்டே...
ஒரு ஆப்பிரிக்கபெண்
தொடருந்தில் எங்களோடு.
நான் மனசுக்குள்
பதில் தேடிய கேள்வி...
அவளுக்கு எப்படி புரிந்தது...?
அவசர பயணப்பொழுதில்...
அனைவரது மௌனத்தின் மத்தியில்
அவளின்....
உரத்த குரல் தொடர்கிறது.
அப்பொழுது...
மாறுபட்ட பலரது முகங்களை
அவதானித்தபின்பு
என்னால் உணரமுடிந்தது.
அவர்கள்
நினைத்திருப்பார்கள் போலும்
அவள்...
பைத்தியக்காரி என்று...!
ஆனால் அவளோ...
மிகத்தெளிவாகத்தான் இருக்கிறாள்
இல்லையேல்...
எப்படி அவளால் சொல்லமுடிந்திருக்கும்
எதிர்காலம் எப்படியிருக்கும் என
எவராலும் சொல்லமுடியாது என்று..!!!
- த.சரீஷ், பாரீஸ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|