 |
கவிதை
முதற்காமம் சரவணன்.பெ
அந்த மாபெரும் வசனத்தின்
மெய்க்காப்பாளனாக
கடவுள் என்னை நியமித்திருந்தார்
...
நான்கு வரிகளில் இருந்த
எழுத்துக்கள் ஏதும் இல்லாத வசனம் அது
...
முதல் வரி பிரபஞ்சத்தின் ஆரம்பம்...
இரண்டாம் வரி ஏவாள் கடித்த ஆப்பிள் பற்றியது.
பெண்கள் அறியக்கூடாதது அடுத்த வரி...
அந்த வசனம் அழியுங்காலம் நான்காம் வரியிலிருந்தது...
காளான்கள் பூத்த ஒரு மழைக்காலத்தில்
மூன்றாம் வரி குறித்த பிரமையிலிருந்தேன்...
சட்டென நிகழ்ந்த ஊழி எனும் பெரு நீரில்
அந்த மாபெரும் வசனம் அழியத்தொடங்கியது.. .
- சரவணன்.பெ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|