 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 13
எம்.ரிஷான் ஷெரீப்
பூவுலகிற்கு வெப்பம் சிந்தாத
அந்தியொன்றின் வெயில்
பகல் முழுதும் வெக்கையில் காய்ந்த
மாலைச் சூரியன் மெல்ல மெல்ல
நீரில் குளிக்கவென இறங்கும்வரை
பரந்த கடல்வழி நீரின் மேல் மிதக்கும்
ஒற்றைப் படகொன்றில் நீயும் நானும் மட்டும்
இருள் வந்த பின்
பகலில் பெருவெப்பம் தந்து
வெயிலலையும் பொழுதுகளில் கானல் நீர் காட்டியபடி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
மேடுகளிலிருந்து மணல் சரியும்
அழகிய பனிக்காலப் பாலைவனம்
நடுவிலொரு மெழுகுதுணிக் கூடாரம்
இரவின் இருளகற்ற நிலவு
உயிர் நெருக்கும் குளிர்
உன்னிலும் என்னிலும் குளிரகற்ற
விறகுத் தீ போதவில்லையென
நாற் கைகளும் கோர்த்து
சுவாசங்களால் ஒருவரையொருவர்
உஷ்ணப்படுத்தியபடி நீயும் நானும் மட்டும்
இப்படியெல்லாம்
ஒரு கோடி எண்ணங்கள்
நாமிருவரும் பல்லாண்டுகளொன்றாய்
வாழ்ந்திடத் தூண்டும்படியான
ஆசையைத் தோற்றுவித்துப் பின்
தனிமையைச் சுட்டுகிறது நிஜம்
அறிவாயா பெண்ணே
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|