 |
கவிதை
மருமகளாய் ! ராஜகுமாரன்
மங்கல மேளம் முழங்கிட
சுற்றமும் நட்பும் சூழ்ந்திட
ம்ந்திர வேதங்கள் ஒதிட
மங்கல நாண்
மாங்கல்யமாய் கழுத்தில்
இருபது ஆண்டுகளாய்
வீட்டில் துள்ளிதிரிந்து
பாவாடை தாவணியில்
பள்ளிக்கு சென்றுவந்து
அம்மாவிடம் வாயடித்து
அப்பாவால் அரவணைத்து
கூடப்பிறந்தவர்களிடம்
சண்டையிழுத்து
தோழிகளுடன் ஊரைசுற்றி
பாவாடைசிட்டாய் சிறகடித்த
திருவளர்செல்வி
திருமணமாகி திருமதியாய்
மாமியார் வீட்டுக்குள் - என்
தாவணியும் சுதந்திரமும்
ஒரே சிறைக்குள்.
பெட்டிப்படுக்கை புதிய
சீர்வரிசை சீதனங்கள்
கையில் எடுத்துக் கொண்டு
புதிய வாழ்க்கைக்குப் பயணங்கள்
அம்மா அப்பாவைப் பார்க்க
அவரைத்தான் கேட்கனும்
தோழிகளுடன் பேச
அவரைத்தான் கேட்கனும்,
கோவிலுக்குப் போக
மாமியாரை கூப்பிடனும்
அங்குமிங்கும் போக
நார்த்தனாரை கூப்பிடனும்
மகளாய் பிறந்தவள்
ம்ருமகளாய்இடம் பெயர்ச்சி
இது பெற்றோர்களுக்கு
தரும் மகிழ்ச்சி.
நாடு விட்டூ நாடுபோனோர்
கிரகம்விட்டு கிரகம் போனோர்
திரும்பிவரலாம் - நான்
திரும்பிவந்தால்
என் பெயர் வாழாவெட்டி.
- ராஜகுமாரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|