 |
கவிதை
பாண்டித்துரை கவிதைகள்
நம் செயல்கள்
நமக்கானதாகத்தான்
ஆரம்பமாகிறது
தொடரும் தேடலில்
அதன் எல்லைகள்
விரிவுபடுத்தபடுகிறது
எதிர்படுபவரை
ஆச்சர்யப்படுத்துவதாகவும்
குப்புறக் கவிழ்ப்பதாகவும்
குற்றம் சாட்டப்படுகிறது
ஆனாலும்
புரிதல் என்ற மொழியை
முன் நிறுத்தியே
புயணம் தொடர்கிறது
தொடரும் பயணத்தின்
ஓரிடத்தில்
புரிதலின் புதிராய்
முரண்பட்ட பிம்பங்கள்
முன்னிருத்தப்படும் போது
பொய்த்து போகிறது
நம்மீதான நம்பிக்கை
செயலற்றுப் போவதொரு பிரமையுடன்
பயணம் தடைபடவும் நடைபோடவும்
அவரவரின் விருப்பப்படியே அமைகிறது.
2...
தொடர்சியாக வந்து செல்கின்றன
நம்மிடையான நெருக்கம்
ஏதோ ஒன்றின்
உணர்ச்சிப் பெருக்கால்
கட்டுப்பட்டதாகவே நினைத்திருந்தேன்
பயணத்தின் பாதையை
உயர்வாக எடுத்துச்செல்வோம்
என்று நம்புகையில்
உளறலாய் காட்டிக்கொடுக்கிறது
உள்ளத்தின் மூச்சுக்காற்று
தகிக்கும் வெம்மையை
தடுத்திட மனம்குன்றியே
வாழ்வின் புன்னகைக்கு
விடைகொடுத்து
மௌனமாக கழிந்த நாட்களில்
என்னுள்ளே நீ
பின்னிப் பிணைந்ததாக நினைத்த
உன்னுடனான உறவு
ஜாமத்து ரகசியங்களை
கண்டறியும் மட்டுமே
புணர்வினை உணரும் தருணத்தில்
நுமக்கிடையே விரிசல்
திரும்பிப் பார்க்கிறேன்
எதிரும் புதிருமாய் நாமிருவரும்
- பாண்டித்துரை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|