 |
கட்டுரை
வாய்க்கவில்லை ஒரு தோழி இலாகுபாரதி
எனக்கென்று ஒரு தோழியிருந்தாள்
மழலைப் பருவத்தில்
அம்மா என்று அழைக்க.
வாடி போடி என்பதற்கும்
கூட்டாக ஆடுவதற்கும்
பள்ளிப் பிராயத்தில்
இரண்டு தோழிகள்.
சண்டையிடவும்
அரட்டையடிக்கவும்
பள்ளிக்குப் பிந்தைய
நாட்களில் இருவர்.
கல்லூரிக் காலத்தில்
மரியாதைக்குரியவளாய்
வழிநடத்திச் செல்பவளாய்
ஒருத்தி.
வாலிபத்தை மென்று விழுங்கும்
வேலையற்ற நாட்களில்
வாய்க்காமல் போனது குறித்து
சீரணிக்க இயலவில்லை
காதல் செய்யவும்
கடுந்துயர் உரைக்கவும்
ஒரு தோழி.
- இலாகுபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|