 |
கட்டுரை
தனி பிருந்தாவனம் கற்பகம் இளங்கோவன்
நம் நேசத்துக்குப்
பச்சைக் கொடி காட்டிய
பாச உறவு
இந்தப் பல்லவப் பேரவை.
கொளுத்தும் வெயிலிலும்
கூட்ட நெரிசலிலும்
நமக்கு மட்டும்
குளு குளுவென்றிருக்கும்
இதுவொரு
அதிசய ஐஸ் பெட்டி.
பயணிக்கும் என் நெஞ்சின்
படபடப்பை அறிந்து
எப்படியாவது படியிலொரு
இடம் ஒதுக்கும் உனக்கு.
யாருமில்லா மதியங்களில்
நமக்குச் சன்னலோர
சுவர்க்க இருக்கைகள் தந்து
சுகமாகச் சுமந்து செல்லும்
சிறகில்லா இந்திரவாகனம்.
உன் குறும்புத் தீண்டல்களில்
நான் நாணி ஒதுங்கினாலோ
சட்டெனத் தோளில் சாய்த்துவிடும்
சில்மிஷத் தோழி.
நேரம் போவதறியாமல்
நாம் பயணிக்க
அதன் போக்கில்
நகரத்தை வலம்
வந்து கொண்டிருக்கும்
நம் தனி பிருந்தாவனம்.
- கற்பகம் இளங்கோவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|