 |
கட்டுரை
குழந்தை
ம.ஜோசப்
பேயாக மாறுதல்
அழகான முகமும்,
பால் மணம் மாறாத குணமும் கொண்ட
அப்பெண் குழந்தை,
சிரிக்கும் அழகே தனி!
அக்குழந்தையின் முகம்
திடீரென பேயயைப் போல் மாறி,
கோப வெறியுடன்
ஒரு கணம் தோன்றி மறைந்தது.
திடுக்கிட்டுப் போன நான்,
மிகுந்த கலவரமடைந்தேன்,
அக்கனவு குறித்து.
பேயாக மாறிப்போவாளா அக்குழந்தை?
அல்லது அவளைப் போலுள்ள அவளது தாயா?
கனவு உணர்த்தும் குறியீடு யாது?
சிறுமிகள் பேயாக மாறும் அபாயம்
உள்ளது, என கனவு உணர்த்துவதாக
நான் நினைத்துக் கொண்டேன்.
அல்லது
அவர்களின் தாய்கள் அவ்வாறு மாறக்கூடும்.
அதற்கான சூழல் அங்கு ஒளிந்துள்ளது,
என்பதுதான் உண்மையாகும்.
அவள் எனது குழந்தை என்பதும்
மற்றொரு உண்மையாகும்.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|