 |
கட்டுரை
குறை ஜெயபாஸ்கரன்
காலிக் குடங்கள்
முட்டி மோதியதால்
நெளிந்து போய்க் கிடக்கிறது
தண்ணீர் லாரி.
பூமிக்குள்ளிருந்து புறப்பட்டு
நடுவீதியில் கம்பீரமாக
தலை நிமிர்ந்து நகர்கிறது
சாக்கடை.
மூடப்பட்ட
ஆலையைத் திறக்கக் கோரி
ஆர்ப்பாட்டம் செய்வதே
அன்றாட வேலையாகி விட்டது,
முன்னொரு காலத்தில்
அந்த ஆலையில்
வேலை செய்து
பிழைத்தவர்களுக்கு.
இப்படியாக
பார்க்கும்போதே
தெள்ளத் தெளிவாக
தெரியத்தான் செய்கிறது,
வாக்களித்து ஏமாந்த
தொகுதி மக்களின் குறைகள்.
இருந்தும்கூட
தொகுதியின்
மூலை முடுக்கெல்லாம்
ஒட்டி வைத்திருக்கிறார்கள்,
குறை கேட்க வரும்
மக்கள் தொண்டரே
வருக! வருக!! என்று
சுவரொட்டியை
எப்படிச் சொல்வது
இந்த அப்பாவி மக்களுக்கு
பார்க்கும் போதே
குறைகளைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு
கேட்கும்போது மட்டும்
புரிந்து கொள்ள
முடியுமா என்று.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|