 |
கட்டுரை
வேட்பாளப் பெருமக்களே..! ஜெயபாஸ்கரன்
திறந்த ஜீப்பில்
நீங்கள் தெருத் தெருவாகச்
சுற்றி வருவது,
கறுப்பு கண்ணாடி ஏற்றிய
காரில் போவதற்காக.
வேட்பு மனுக்களை
தாக்கல் செய்வது
கோரிக்கை மனுக்களைக்
கிழித்துப் போடத்தான்.
வாக்குத் தவறுவதையே
வாழ்க்கையாகக் கொண்ட
நீங்கள்
வாக்காளர்களை மட்டும்
தவறவிடவே மாட்டீர்கள்.
சொன்னதைச் செய்வதாகச்
சொல்வீர்கள்.
ஆனால்,
செய்துகொண்ட எதையும்
சொல்லவே மாட்டீர்கள்.
நாடு நலம் பெற
வாக்குக் கேட்ட உங்களின்,
வீடு நலம் பெற்றதை
விசாரணைகள்
தெரிவிக்கின்றன.
தனித் தனியாக
மக்களைப் பார்த்து
ஓட்டுக் கேட்டுக் கும்பிட்ட
உங்களுக்கு
மந்திரியானவுடன்
மக்களைக்
கூட்டமாகப் பார்த்தால்தான்
கும்பிட முடிகிறது.
என்னவோ போங்கள்
எத்தனைத் தேர்தல் வந்தாலும்
ஏமாற நாங்க ரெடி
ஏமாத்த நீங்க ரெடியா...?
அப்படியானால் ஓ.கே.
லெட் அஸ் ப்ளே...
எலக்ஷன்.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|