 |
கட்டுரை
அறை ஜெயபாஸ்கரன்
கற்பனையில்தான்
கட்டிப் பார்க்க முடியும்
அப்படி ஒரு அறையை
உன்னாலும், என்னாலும்
நம் போன்றவர்களாலும்.
அண்ணாந்தும், அதிசயித்தும்
பார்க்க வேண்டியிருக்கிறது
அறைக்கு வெளியே தொங்கும்
அழகிய பெயர்ப் பலகையை.
மின் விசிறியின் காற்றோட்டத்தில்
அசைந்தாடுவதுபோல் தெரிகிறது
சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கடலோரத் தென்னந்தோப்பு.
அறிஞர்களின் சிந்தனைகள்
அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன,
புத்தகங்களாக.
எழுதப் படிக்க வசதியாய்
தேக்குமர மேசை மீது மட்டும்
வட்டமாகப் பொழிகிறது விளக்கு.
விதம் விதமான
எழுதுகோல்களும்
கட்டுக்கட்டான
வெள்ளைத்தாள்களும்
ஏங்க வைக்கவே செய்கின்றன,
எழுதத் தெரியாதவர்களையும்
அந்த அறைக்கு உரிய
எழுத்தாளரையும்.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|