 |
கட்டுரை
உணர்வு ஜெயபாஸ்கரன்
திட்டமிட்டோ
தற்செயலாகவோ
தன் செருப்பை விட்டுவிட்டு
என் செருப்பை
போட்டுக் கொண்டு
போய்விட்டான் ஒருவன்.
அவசரத்துக்கு
அவன் செருப்பையணிந்து
நடமாடும்படி
நேர்ந்து விட்டது எனக்கு.
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
உள்ளங்கால்களின்
வழியாக எனது
உள்ளத்தில் நுழைகிறது
அவனது வேதனைகள்.
மாரியம்மன் திருவிழாவிற்கு
ஊருக்குப் போய்வர முடியாத
வேதனை வாட்டுகிறது
பகுத்தறிவாளனான என்னை.
ரேஷன் அட்டைக்கு
பிளாஸ்டிக் உறையொன்றை
வாங்கிப் போட
வெறிகொண்டு அலைகிறது
என் மனம்.
இப்படியாக இன்னும்
எனக்குத் தொடர்பற்ற
கவலைகளையெல்லாம்
உணர்த்திக் கொண்டிருக்கின்றன
முன்னொரு காலத்தில்
வாங்கப்பட்ட
அவனது செருப்புகள்.
ஒரு வேளை
எனது செருப்புகளால்
என்னை அவன்
உணர்வானெனில்,
கவிதைத் தொகுதிக்கு
அணிந்துரை வாங்க
ஆள் தேடி
அலைய நேர்ந்திருக்கும்
அவனுக்கு.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|