 |
கட்டுரை
பட்டம் ஜெயபாஸ்கரன்
மலிவாகவே
கிடைத்துவிடுகின்றன
மனிதர்களுக்கான
பட்டங்கள்.
பெயரின்
வலது பக்கத்திற்கான பட்டங்களுக்கு
நிறையவே பணம் தேவைப்படுவதால்
இடது பக்கம் எழுதிக்கொள்ள
வசதியாக
வாரி வாரி வழங்கப்படுகின்றன
விதவிதமான பட்டங்கள்.
எமது நாட்டில்
பொது வாழ்வில் நுழைந்தவர்களுக்கு
வீரம் தொனிக்கும்
பட்டங்கள் இல்லாமல்
சாத்தியப்படுவதேயில்லை
வீதிகளில் உலாவருவதற்கும்
மேடைகளில் உரையாற்றுவதற்கும்.
மட்டுமீறிப் புழங்கும்
பட்டங்களின் விளைவாக
பெயருக்குப் பொருத்தமான
பட்டங்களைத் தேடி
படாதபாடு படுகிறேன்
நான்.
பட்டங்களை
நினைவுகூர்ந்து
பெயருக்கு முன்பாக
சேர்க்காமல்
முகவரி எழுதவே
முடியாமற் போய்விட்டது
என்னால்.
உரிய பட்டங்களோடு
முக்கிய பிரமுகர்களின்
முகவரி எழுதிய கையோடு
எனது வீட்டிற்கான
மளிகைச் சாமான் பட்டியலை
எழுத நேரும் சமயங்களில்
என்னால் தவிர்க்கவே முடியவில்லை...
'வீரச் சீரகம்'
'வேக வெந்தயம்' என்று
பட்டியல் முழுவதையும்
பட்டங்களோடு
எழுதுவதை...
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|