 |
கட்டுரை
புள்ளி ஜெயபாஸ்கரன்
எதற்கெடுத்தாலும்
புள்ளி வைத்துப்
பழகிவிட்டார்கள்
மனிதர்கள்.
பிடிக்காத பெயர்கள் மீது
புள்ளி வைத்து ஒதுக்குவதே
வேலையாகி விட்டது
பல பெரும் புள்ளிகளுக்கு.
பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பதை விடவும்
அதற்கொரு முற்றுப் புள்ளி
வைப்பதில்தான்
ஆர்வமாக இருக்கிறார்கள்
எல்லாரும்.
தற்காலிகமான
முற்றுப்புள்ளியைத்
தகர்த்துத் தாண்டுவது
ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை
பிரச்சனைகளுக்கு.
கரும்புள்ளி
செம்புள்ளி குறித்து
நிறையவே பேசுகிறார்கள்
கிராமப் பகுதிகளில்
அதென்னவோ தெரியவில்லை
செம்புள்ளியை தவிர்த்து விட்டு
கரும்புள்ளியை மட்டும்
குத்துகிறார்கள்
தேர்தல் தோறும்
வாக்காளர்களுக்கு.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|