 |
கட்டுரை
காதல்...காதல்... ஜெயபாஸ்கரன்
என்ன சொல்வதென்று
தெரியவில்லை,
என்னைப் பற்றிக் கொண்டு
உன்னைப் பற்றிக் கேட்பவர்களுக்கு.
ஆசைமுகம்
மறந்து போகலாம்
ஆளையே மறந்து போகலாமா?
என்று யாரிடமோ
சொல்லிக் கொண்டு போகிறான்,
என்னையும், உன்னையும்
புரிந்து கொள்ளும்
மனிதமற்ற வேலாயுதம்.
கண்களைப் பார்த்து
பேசுவதும்
காதுபடப் பேசுவதும்
வேறு வேறாக இருக்கிறது
இந்த மனிதர்களுக்கு.
என்னை நீ
ஏமாற்றி விட்டுப் போய்விட்டதாக
நாலு பேரிடமாவது
சொல்லா விட்டால்
அன்றிரவு
உறக்கங்கெட்டு அலைகிறான்
வி.பி.ரங்கன்
உன் காதலை
அவள் புரிந்துகொள்ளவில்லையா?
என்றென்னைக் கேட்டுக் கேட்டு
துக்கம் கக்குவதே
தினசரி வேலையாகி விட்டது
தயாளனுக்கு.
உன்னைப் பற்றி
நான் சொல்லும் எதுவும்
எடுபடாமலே போய்விடுகிறது,
ஆணையும், பெண்ணையும்
காதலர்களாகப் பார்த்தே
பழக்கப்பட்டுப்போன
இவர்களிடம்.
உன் பொருட்டு
நான் படும் அவஸ்தைகளுக்கு
முற்றுப்புள்ளியாக,
அழைத்து வந்து இவர்களுக்கு
காட்டிவிட்டுப் போகலாமல்லவா?
உன் சந்திரசேகரனை.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|