 |
கட்டுரை
களைப்பு ஜெயபாஸ்கரன்
தனது
களைப்பு குறித்து
பேசிப் பேசியே,
களைப்படையச் செய்வோரிடம்
கவனமாகத்தான்
இருக்க வேண்டும்
களைப்பறியாமல் உழைப்பவர்கள்.
உழைப்பவர்களின்
வாயிலிருந்து
ஒருபோதும் வருவதில்லை
களைப்பாக இருக்கிறது
எனும் வார்த்தை.
களைத்துப் போயிருப்பதாக
சொல்லிக் கொள்பவனை விட
களைத்துக் காணப்படுகிறவனுக்கே
தண்ணீர் குடிப்பதற்கான
தகுதியிருக்கிறது.
பயணக்களைப்பு
குறித்துக்கூட
நிறையவே பேசுகிறார்கள்,
பயணம் முழுக்க
உறங்கிக் கொண்டே
ஊர் வந்து சேர்ந்தவர்கள்.
நானறிந்தவரை
பயணங்களில்
உறங்கிக் கொண்டு
வந்தவர்களிடம்,
ஓட்டிக் கொண்டு வந்தவர்கள்
ஒரு நாளும் சொன்னதில்லை
களைப்பாக இருக்கிறது என்று.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|