 |
கட்டுரை
மயில் ஜெயபாஸ்கரன்
மயில்களுக்கு எதிராக
நிறையவே சிந்திக்கிறார்கள்
மனிதர்கள்.
முதுகில் அமர்ந்து
உலகை மூன்றுமுறை
சுற்றி வந்தானாம்,
தன் தோகையையே
தூக்கிக்கொண்டு
விரைந்தோட முடியாத
மயில்மீது முருகன்.
கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழி
என்று தொடங்கி
அடுக்கிக் கொண்டே
போகிறார்கள்
மனிதக் காழ்ப்பில்
பறவைகளை மட்டந்தட்டிய
பழம் புலவர்கள்
''மயிலே மயிலே என்றால்
இறகு போடாது'' என்கிறார்கள்,
கத்திரிக்கோலுடன் பிறந்து
எதையும்
அறுத்து ரசிக்கும்
மரபில் பிறந்த
அழகுணர்ச்சியாளர்கள்.
எல்லாருமே
ஒருவித வீராவேசத்தோடு
அலைகிறார்கள்
மயில்களின் மயிருக்காக.
மயில்களை
பார்க்கும்போது மட்டுமின்றி
போய்ப் பார்த்தும்
சொல்லியாக வேண்டியிருக்கிறது.
'மயிலே...மயிலே... நீ
எந்த மயிரானுக்கும்
இறகு போடாதே' என்று.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|