 |
கட்டுரை
கூட்ட நடப்பு ஜெயபாஸ்கரன்
குழு குழுவாக
கூடி நின்று
பேசுகிறார்கள்.
எந்தக் குழுவிலும்
இடம் பெறாமல்
குழுதோறும் சென்று
இரண்டு நிமிடம்
காது கொடுத்தும்
நிறைவு கிட்டாமல்
அலைபாய நேருகிறது
சிலருக்கு.
வேறொரு ஊரில்
வேறொரு அமைப்பின்
கூட்டத்திற்காக
முடிவாகிறது
ஆளும், நாளும்.
எடுத்த நூல்களை
இருந்த இடத்திலேயே
இம்மியும் பிசகாமல்
திரும்ப வைப்பவர்களை
ஞானப் புன்னகையுடன்
நோக்குகிறார்
கொள்கைப் பரவலுக்கான
நூல்களைப் பரப்பியவர்.
ஒதுக்குப் புறத்து
மரத்தடியில்
ஓங்கி ஒலிக்கிறது
உடன்பட முடியாதவர்களென
ஊரறிந்த இருவரின்
தத்துவ வாதம்.
அரங்கிற்குள் நுழையாமல்,
இப்படியாக இன்னும்
ஏதேதோ நிகழ்த்துகிறார்கள்...
கூட்டத்திற்குப்
போவதாகச் சொல்லி
புறப்பட்டு வந்தவர்கள்.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|