 |
கட்டுரை
நீயும் நானும் ஜெயபாஸ்கரன்
பழகாத டிரைவரையும்
பார்க்காத பிரேக்கையும்
நம்பித்தான்
நாள்தோறும் தொடர்கிறது
நமது பஸ் பயணம்.
கதிர் வீச்சு நிகழாது
எனும் நம்பிக்கையில்தான்
கல்பாக்கத்திற்கு அருகிலேயே
குடும்பம் நடத்துகிறேன் நான்.
கடை நடத்துகிறாய் நீ.
அணுகுண்டுகளை
வைத்திருப்பார்களே தவிர
வீச மாட்டார்கள் எனும்
நம்பிக்கையில்தான்
எல்.ஐ.சி.க்கு
தள்ளாடித் தள்ளாடி
தவணை கட்டுகிறேன் நான்
வேளச்சேரியில்
வீடு கட்டுகிறாய் நீ.
இப்படியாக
சாகிற வரைக்கும் பிறரை
சார்ந்தும், நம்பியும்
வாழ்ந்தாக வேண்டிய
சமூக விலங்குகள் தான்,
மளிகைக் கடைக்காரனான நீயும் உன்னிடம்
மளிகை சாமான் வாங்க வந்த நானும்.
இருந்தும்
ஒரே ஒரு தேங்காயை
எனக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு
எப்படி சொல்ல முடிகிறது உன்னால்
இந்தக் காலத்தில்
யாரையுமே நம்ப முடியவில்லை என்று.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|