 |
கட்டுரை
மௌன அஞ்சலி ஜெயபாஸ்கரன்
எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.
இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்.
இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த
முரணுமில்லை எனக்கு.
ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.
கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை.
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மௌனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்.
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.
ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|