 |
கவிதை
வி.ஐ.பி.
மு.குருமூர்த்தி
இறைச்சிக்கடை
ஓநாய் கூட்டம்
கண்கள் வெறிக்கும்
கண்களே கூறுபோடும்
கண்கள் பார்க்கும்
கண்களே முகரும்
கண்கள் நக்கும்
கண்களே கடிக்கும்
கண்கள் சுவைக்கும்
கண்களே விழுங்கும்
தன்முறைக்காக
தவிக்கும் விஐபி
ஆட்டின்
அலறல் மட்டும்
கேட்காது
அருகில் இருக்கும்
அந்தக் காது.
- மு.குருமூர்த்தி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|