 |
கட்டுரை
ஆடுகளக்கோடுகள் புகாரி
ஓர் கால்பந்தாட்டத்தில்
என் கண்ணாடவிட்டேன்
மைதானச் சுறுசுறுப்பால்
வியப்பு மூளையிலாட
உதைபடும் பந்தால்
பரிதாபம் மனதிலாடியது
காலங்காலமாய்ப் பின்னப்பட்டு
பந்தின் எல்லைக்கோடுகள்
திட்டவட்டமாகவே
வரையறுக்கப்பட்டிருந்த
விளையாட்டில்...
கோட்டைத் தாண்டவிடாமல்
தரைக்கும் வானுக்குமாய்
புழுதி பறக்க பந்தைத்
பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்
விழுந்து விழுந்து விளையாடி
வலுப்பெற்ற அனுபவ வீரர்கள்
பாவம்
புத்தம்புதுப் பந்து
உள்காற்று இருக்கும்வரை
வெளியேற வழியற்று
மேனியெங்கும் ரத்தக்கோடுகள்
ஆர்வத்தோடு
பார்த்துக்கொண்டிருந்த
ரசிகர் கூட்டம்
தடுப்பவனைத் தாண்டி
கோட்டைக் கடந்து
பந்து
வெளியில் விழுந்து
ஓர் சிறு பொழுது சொகுசாய்ச்
சொர்க்க அமைதி கண்டபோதுதான்
உற்சாக மிகுதியால்
கைதட்டிக் கைதட்டி
உட்காதையும் பிளந்தார்கள்
- புகாரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|