 |
கவிதை
மறக்கமுடியாதவை க.அருணபாரதி
உன் ஆடை நிறமும்
என் ஆடை நிறமும்
ஒன்றாக இருந்ததென
மகிழ்வோடு சுட்டிக்காட்டி
''சாக்லேட்" பரிசுகேட்ட
சந்தோஷான நிமிடங்கள்...
பொங்கல் விடுமுறைக்கு
வீட்டுக்கு செல்லும்முன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னிடம் வாழ்த்துபெற
நீவரும் நேரம்பார்த்து
நின்றிருந்த நிமிடங்கள்...
எங்கள் ஊர்நிகழ்ச்சிக்கு
எதிர்பாராமல் வந்தபோது
என்வீட்டு செல்லமாக
வலம்வந்த குழந்தையிடம்
அன்போடு பேசிய
அழகான நிமிடங்கள்...
நிலநடுக்கத்தால் எழுந்த
அலைகடல் சீற்றத்தில்
ஊரே பாதித்தபோது
உள்மனம் உனைக்கேட்க
தொலைபேசி வழியாக
நலம்கேட்ட தருணங்கள்...
வாழ்வோடு கலந்துவிட்ட
நிமிடங்கள் பலஇருந்தும்
வார்த்தைகள் பலிக்காமல்
நான் இங்கே..நீ அங்கே..
- க.அருணபாரதி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|