 |
கவிதை
மழைத்துளியும் ஏங்குதடி... க.அருணபாரதி
உன் மேல்
உள்ள ஆசையில்
தானோ என்னவோ
நீ உலா போக வெளியே
வரும் பொழுது தான்
கருகருக்கிறது வானம்,
மழையாய் உன்னை
முத்தமிட...
மழைத்துளிகள் மேலே
படாதவாறு குடை கொண்:டு
தடுத்தாய் நீ...
ஆசையோடு வந்த
மழைத்துளிகள் கீழே விழுந்து
கண்ணீராகி விட்டன..
தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்க
நினைத்தது மின்னல்..
உன் சிரிப்பைக்
கண்டு அதற்கும்
வந்தது இன்னல்..
உன் பாதம் பட்டு
உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம்
அடைந்து
நதியில் கலந்தன..
மழையைக் கூட
மகிமைப் படுத்தி
எழுதச் சொல்வது
காதல்..
எழுதும் போது
வான் மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்....
.
வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும்,
மழை..
- க.அருணபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|