நிகழ்வு
ஈழப்பிரச்சினை: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..
ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் ஜனவரி 22, 2009 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :
1. கெம்ப குமார்
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.
படங்கள் உதவி: இலக்குவண்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|