பெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்

ஜெர்மானியராகப் பிறந்தவர் ஐன்ஸ்டீன். நாஜீகளால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிசாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவரை அந்த ஆராய்ச்சி சாலைக்கு அழைத்துச் சென்று, சுற்றிக்காட்டி திருப்திதானா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்டனர்.
ஐன்ஸ்டீன் சற்று தயங்கி தாழ்ந்த குரலில் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறது, கொஞ்சம் பெரிய குப்பைக் கூடை இருந்தால் நல்லது” என்றார்.
"பெரிய குப்பைக் கூடையா, எதற்கு?”
“நான் என்ன மேதாவியா… எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன், எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்துவிட்டு மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தைச் சரியாக செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார்.
தகவல் அனுப்பி உதவியவர்: கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
- ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|