விஷ்ணுவர்தனுடன் த்ரிஷா மோதல்
‘சர்வம்’ படத்தில் நடித்து வரும் த்ரிஷாவிற்கும், அதன் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கும் இடையே முட்டல், மோதல் இருந்து வருகிறது.
‘அபியும் நானும்’ படத்தையடுத்து த்ரிஷா நடித்து வரும் படம் ‘சர்வம்’. இதில் அவருக்கு ஜோடியாக ஆர்யா நடிக்கிறார். படம் ஆரம்பித்ததிலிருந்து த்ரிஷாவுக்கும், படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கும் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கிறதாம்.
ஒரு பாடலுக்கு த்ரிஷாவை நீச்சல் உடையில் ஆடச் சொன்னபோது, மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என்று கூறி மறுத்திருக்கிறார். பின்பு விஷ்ணுவர்தன், கதைக்கு இந்த கவர்ச்சி தேவை (டூயட் பாடலில் என்னப்பா கதை இருக்கு?) என்று வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார்.
இது முடிந்தபின்பு, கதைப்படி இறப்பதுபோல் இருக்கும் ஒரு காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. ‘பீமா’ படத்தில் அப்படி நடித்ததில் தனது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற காரணம் வேறு. இவருக்காக கதையை மாற்றமுடியாது என்று விஷ்ணுவர்தன் கூறுகிறார். த்ரிஷா கதையை மாற்றினால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். சண்டை வலுத்து, தற்போது இருதரப்பிலும் சமாதான முயற்சிகள் நடந்துவருகின்றன.
இந்த நடிகைகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கதைக்குச் சம்பந்தமில்லாமல் எந்த ஒரு காட்சியிலும் அரைகுறை உடையுடன் வரச் சொன்னால் வருகிறார்கள். கதைக்குத் தேவை என்றாலும், இறப்பது போன்றோ, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவோ நடிக்க மாட்டேன் என்கிறார்கள்.
கொடுமைடா சாமி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|