ரஜினியின் ரீமிக்ஸ் பாடலில் சிம்பு

நல்லவனுக்கு நல்லவன் படத்தின் ‘வச்சுக்கவா உன்னை மட்டும்..’ பாடலை சிம்பு நடிக்கும் சிலம்பாட்டம் படத்திற்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் சிறிய அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்ட உடையணிந்து ரஜினி அந்தப் பாடலுக்கு ஆடியிருப்பார். அதே போன்று இந்த ரீமிக்ஸ் பாடலிலும் சிம்பு ஆடியிருக்கிறார். இந்தப் பாடல் மட்டும் 6 நாட்கள் படமாக்கப்பட்டதாம். அசல் பாடலைப் போலவே இந்தப் பாடலும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சிலம்பாட்டம் படக்குழுவினர்.
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் சினேகா, ஷானாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சரவணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகிறார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|