வெளிநாட்டு இந்தியரை மணக்கும் கார்த்திகா

அனைத்து நடிகைகளைப் போலவே நடிகை கார்த்திகாவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரை மணமுடிக்க இருக்கிறார்.
‘கருவாப்பையா’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் கார்த்திகா. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்பான தோற்றம் இவருக்கு. அதனால்தான் என்னவோ தமிழ் சினிமாவில் இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடைசியாக கார்த்திகா நடித்து வெளிவந்த படம் ராமன் தேடிய சீதை. அதில் சேரனுக்கு ஜோடியாக ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இப்போது திண்டுக்கல் சாரதி, புலன் விசாரணை, நாளை நமது, ஆறுமனமே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகர்கள் யாரும் இந்தப் படத்தில் இல்லை.
தொடர்ந்து மூன்றாம்கட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது கதைக்கு உதவாது என்ற நினைத்தாரோ என்னவோ, திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டார். ஆனாலும் கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் திருமணம் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இல்லையென்றால் யார் விடுகிறார்கள்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|