Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
பிப்ரவரி 2006
கட்டுரை

பெரியாரை உலக மயமாக்குவோம்

கி. வீரமணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).

Periyar E.V.Ramasamy திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.

"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (http://land.archiv.org) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.

அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?

பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com