Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceEcology
சுற்றுச்சூழல்

ஒரு நாய் எப்படி நடக்கிறது?
மு.குருமூர்த்தி

ஒரு நாய் எப்படி நடக்கிறது?

இது என்ன....அற்பமான கேள்வியாக இருக்கிறதே?

horse அப்படித்தானே நமக்கெல்லாம் நினைக்கத்தோன்றுகிறது?

ஒரு நடக்கும் நாய் பொம்மையை செய்யும் தொழிலாளி தவறுசெய்தால் பெரிதாக எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்களில் ஒரு நான்குகால் பிராணி நடப்பதாக காண்பிக்கும்போது தவறு செய்துவிடக்கூடாது இல்லையா?

ஹங்கேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் 50% நிகழ்வுகளில் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

120 ஆண்டுகளுக்கு முன்பே நாலுகால் பிராணிகளின் இயக்கத்தை விலங்குகளின் உடற்கூறு இயல் வரையறுத்துவிட்டாலும்கூட, ஏறத்தாழ சரிபாதி நிகழ்வுகளில் தவறான சித்திரிப்புகள் செய்யப்படுவதாக ஹங்கேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதெல்லாம் இருக்கட்டும். ஒரு நாயோ, குதிரையோ எப்படி நடக்கத்தொடங்குகிறது? நமக்குத்தெரியுமா?

இல்லை. நாம்தான் இதை எப்போதாவது கவனித்திருக்கிறோமா?

அனைத்து நான்குகால் பிராணிகளும் இடது பின்னங்காலால் நடையைத்தொடங்குகின்றன. அதற்கப்புறம் வலது பின்னங்காலை முன்னோக்கி எடுத்துவைக்கிறது. தொடர்ந்து வலது முன்னங்காலும் இடம்பெயர்கிறது. ஒரு நான்குகால் பிராணி இவ்வாறு நடக்கும்போது எந்த ஒரு அசைவின்போதும் மூன்றுகால்களால் உடல் தாங்கப்படுகிறது. இந்த மூன்று கால்களும் ஒரு முக்கோணத்தை உருவாக்குவதால் நான்குகால் பிராணி தரையில் விழுந்துவிடாமல் தன்னை பாதுகாத்துக்கொள்கிறது.

தகவல்: மு.குருமூர்த்தி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com