நகர் புறத்துச் சாலையின் குறுகிய சந்து
பா. ராஜா
யாருக்கும் தெரியும்
அது தீதுகளின் நிகழ்விடம்
பாதகங்களின் உச்சமாய்
விலை முடிக்கப்பட்டிருக்கிறாள்
ஏதுமறியா சிறுமியொருத்தி
கழுவமுடியாமல் இன்று
நிலவு மிச்சம் வைத்திருக்கும் இருளில்
நிச்சயம் நிகழக்கூடும்
ஒரு நதியின் மரணம்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|