ஒரு குடம்
ஜி. மஞ்சுளா
ஒரு குடம் தண்ணீர்
தேவைப்படுகிறது
அவளுக்கு
இடுப்புகளின் சுமையைவிட
இதயம் சுமக்கிறது
ஏதோ ஒன்றை.
குழாயடிக்கும் குடத்துக்கும்
எத்தனை முறைதான்
சம்பந்தம் பேசுவது?
அதன் வரிகள் யாவும்
மனப்பாடமாகிவிட்டது
அவளுக்கு
போகும் வழியில்
மறக்காமல் நினைக்கிறாள்
அதன் வரி ஒன்றை
தேவைகளை
சுமந்து திரிகிறாய்
என்னைப் போலவே
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|