மரத்தின் பயணம்
இளங்கவிஅருள்
வெட்டப்பட்ட மரம்
நின்ற இடத்தில்
கிளைகளற்று
படுத்துக் கிடக்கிறது
அதைக் கடந்து போன பட்டாம்பூச்சி
கூடி மகிழ்ந்த வாசத்தை
விருப்பமிருந்தும் நிராகரித்து
கூர்முனைகளை சரிசெய்து
திசையற்று அலைகிறது
ஒவ்வொரு நாளும்
துணுக்குத் துணுக்காய் வெட்டி எறிபடும்போது
சாம்பலான நினைவுகள்
திடீரென ஒருநாள்
முன்பின தெரியாதவனை
எரிக்கப்பயன்பட்ட
எனது மார்கண்டம்
அவனது அஸ்தி
நாம் சங்கமித்த கடலில்
கரைந்த போது
சிப்பியின் வயிற்றில்
கர்ப்பத்தின் சுமையோடு
ஆழ்கடலில் தவமிருக்கிறது
வெட்டப்பட்ட மரம்
என்றாவது ஒருநாள்
யாராவது தேடிக்கண்டுபிடித்து
தெருவில் விற்கும் பொருள்
நானாவாகக் கூடயிருக்கலாம்
நீ விரும்பி வாங்கிய
உனக்கே தெரியாத
உயர்ந்த பொருளாய்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|