வாழ்க்கை வீதியில்...
அ. இளஞாயிறு
மதுர சில்லா சீமையில
கல்லுப்பட்டி மேக்கையில
காடு வெளஞ்சி கெடந்தப்போ
கம்புக்கருத புடுங்கி
கையிடுக்குல நெரிச்சி
உள்ளங்கையில வச்சி ஊதி
ஒடம்புக்கு ஒரமா
தின்ன காலம் போயி...
படிச்ச மெதப்புல
வெவசாயம் பாக்க வெக்கப்பட்டு
பட்டணத்துல வேலபாத்து
பொட்டலம் பான்பராக்க
உள்ளங்கையில வெச்சி
கட்ட வெரலால கசக்கி
பல்லிடுக்குல பள்ளம் பாத்து
பக்குவமா வெச்சி
கண்ட சொகத்துல
நோக்காட வெலக்கி வாங்கி
ஆயுசு அம்புட்டயும்
அனுபவிக்காம - வீதியில விட்டுட்டு
நாசமாய்ப் போயிட்டான்
ஏம் மவன்!
ஏம் புருசன்!
ஏம் பெத்தவன்!
மூன்று குரல்... வீதியிலே...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|